வெற்றிமாறன் இயக்கும் சவுக்கு சங்கர் பயோபிக்கில் ஹீரோ இவரா?.. அப்போ தேசிய விருது கன்பார்ம்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், சவுக்கு சங்கரின் வாழ்க்கை கதையை படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விடுதலை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றதோடு, விருதுகளையும் வென்று குவித்தது. தற்போது அவர் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விடுதலை படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். அடுத்தாண்டு இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் இப்பொது முடிந்துவிட்டது.. பரபரப்பை கிளப்பிய கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு!
இதற்கு அடுத்தபடியாக தனுஷின் வடசென்னை 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், விஜய், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதை சொல்லி உள்ளார். இவ்வாறு செம்ம பிசியான இயக்குனராக வலம் வரும் இவர் மேலும் ஒரு படத்தை எடுக்கவும் பிளான் போட்டு உள்ளாராம். அது ஒரு பயோபிக் படமாம். பரபரப்புக்கு பஞ்சமில்லாத அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கரின் பயோபிக்கை தான் இயக்குனர் வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளாராம்.
இந்த தகவலை சவுக்கு சங்கரே ஒரு பேட்டியில் உறுதிபடுத்தி உள்ளார். தற்போது கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த பயோபிக்கில் சவுக்கு சங்கராக தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷும், வெற்றிமாறனும் கூட்டணி சேர்ந்தாலே அப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைத்துவிடும், அந்த வகையில் சவுக்கு சங்கரின் பயோபிக்கில் தனுஷ் நடித்தால் உறுதியாக தேசிய விருது கிடைக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படியுங்கள்... OTTயில் சிறப்பான வெற்றி பெற்ற "சூழல்" இணைய தொடர்.. இரண்டாம் பாகம் கமிங் சூன் - விரைவில் படப்பிடிப்பு!