ரசிகர்களை கவர்ந்த ரங்கம்மாள் பாட்டி..மறக்கமுடியாத சில ஞாபகங்கள்..
மறைந்த ரங்கம்மாள் பாட்டி நடித்த பெரும்பாலான நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த தொகுப்பிலிருந்து சில...

rangammal patti
வடிவேலு காமெடி மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ரங்கம்மாள் பாட்டி 1967 ஆம் ஆண்டு வெளியான விவசாயி படத்தின் மூலம் சினிமா துறையில் நுழைந்துள்ளார்.
rangammal patti
பின்னர் காவல்காரன், நல்ல நேரம், சூரியகாந்தி, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் ரங்கம்மா பாட்டி
rangammal patti
பின்னர் 2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே யாரோ யாரோடி பாடலில் பாட்டியாக தோன்றி இருப்பார் இதைத்தொடர்ந்து பாபா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கி-மு, கொலை கொலையா முந்திரிக்கா, பலேபாண்டியா, குட்டிமா உள்ளிட்ட படங்களில் பாட்டி ஆகவே தோன்றியிருந்தால் ரங்கம்மாள்
rangammal patti
அதோடு வடிவேலுவின் பிரபல காமெடியான நச்சுனு சொல்லிட்டு போ என்னும் காமெடிகள் தோன்றி ரங்கம்மா மிகவும் பிரபலமானார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான பாட்டு படம் ரசிகர்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.
rangammal patti
மேலும் பட்டத்து யானை, ரேணுகா, நோட்டா உள்ளிட்டவற்றில் தோன்றிய ரெங்கம்மா புத்தம் புது காலை விடியாதே என்னும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து இருந்தார். பின்னர் போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் இருந்த ரங்கம்மாள் பாட்டி உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தால் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார் அவரை அவரது உறவினர்கள் கவனித்து வந்தனர்.
rangammal patti
பிரபலமான நகைச்சுவை காட்சிகளில் தோன்றி ரசிகர்களை சிரிக்க வைத்த ரங்கம்மா பாட்டியின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக அமையவில்லை. ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் வறுமையின் பிடியில் சிக்கி தற்போது உயிரிழந்த சோகம் அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.