கொஞ்சம் சொதப்பிடுச்சு..? 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து ரசிகர்களின் கருத்து..!
நடிகர் - சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு ரசிகர்கள் சிலர் பாசிட்டிவ் கமெண்ட் தெரிவித்து வந்தாலும், சிலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதற்க்கு காரணம் சொதப்பலாக எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் தான்.
Simbu
கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் ஏற்கனவே எடுக்கப்பட்ட 'விண்ணை தாண்டி வருவாயா' , மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள், வேறு லெவலுக்கு ஹிட் அடித்ததால், அதே விதமான எதிர்பார்ப்போடு இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம்.
ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பின் காரணமாக, இன்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் செய்திகள்: சிம்புவுக்கு வெற்றியை ஈட்டி கொடுக்குமா ? வெந்து தணிந்தது காடு.. என்னதான் கதை.. இங்கு பார்க்கலாம்
சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலை சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் இந்த முறை கெளதம் மேனன் வித்தியாசமாக படத்தை இயக்கியுள்ளதாகவும், சிம்பு டான்டாக மனதில் நிற்பதாகவும் தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட் வந்து கொண்டிருந்தாலும், சிலர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி புரியவில்லை என்று சொல்வது படத்திற்கே மிகப்பெரிய மைனஸ் என தோன்றவைக்கிறது.
அதே போல் ஆரம்பத்தில் இருந்து படம் மிகவும் பொறுமையாக செல்வதாகவும், பின்னர் வேகமெடுத்தாலும்... கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் இயக்குனர் சொதப்பி விட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டபோதும் ரசிகர்கள் இப்படி பட்ட கருத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: விமர்சனங்களால் எழுச்சி பெரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு...ட்வீட்டர் ரிவ்யூக்கள் என்ன சொல்கிறது ?