விஜய்க்கு ரூ.200 கோடியை வாரி வழங்கிவிட்டு... வெங்கட் பிரபு சம்பளத்தில் கைவைச்சிட்டாங்களே! என்ன கொடுமை சார் இது
விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கம்மி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்தவர் கங்கை அமரன். அவரின் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவருமே சினிமாவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வெங்கட் பிரபு ஆரம்பத்தில் நாயகனாக வேண்டும் என்கிற கனவோடு படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிப்பு செட் ஆகாததால், படம் இயக்க வந்த வெங்கட் பிரபு, சென்னை 28 படம் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.
உதவி இயக்குனராக யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சென்னை 28 படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். இதையடுத்து சரோஜா, கோவா என தொடர்ந்து ஜாலியான படங்களை இயக்கிய அவர், அஜித்தை வைத்து மங்காத்தா என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக மங்காத்தா அமைந்தது.
மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா, கார்த்தி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை வெங்கட் பிரபு இயக்கினாலும், அப்படங்கள் தோல்வியைத் தழுவின. இதையடுத்து கம்பேக் கொடுக்க வேண்டும் என கடினமாக உழைத்த வெங்கட் பிரபு, சிம்புவின் மாநாடு படம் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்பினார். மாநாடு படத்துக்கு தெலுங்கு திரையுலகுக்கு சென்ற அவர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கினார். அப்படம் அண்மையில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
இதையும் படியுங்கள்... 'லவ் டுடே' ஹிந்தி ரீமேக்..! ஹீரோவாகும் சூப்பர்ஸ்டாரின் வாரிசு! ஹீரோயின் யார் தெரியுமா?
கஸ்டடி படத்தின் தோல்விக்கு பின்னர் அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் தளபதி 68 படம். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு 200 கோடி கொடுத்தால், வெங்கட் பிரபுவுக்கு கூடுதல் சம்பளமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் திடீர் டுவிஸ்ட்டாக அவருக்கு வெறும் ரூ.10 கோடி தான் சம்பளமாக வழங்க உள்ளார்களாம். வெங்கட் பிரபு முதலில் தளபதி 68 படத்துக்காக ரூ.20 கோடி சம்பளம் கேட்டாராம். சமீபத்தில் வெளியான அவரின் கஸ்டடி திரைப்படம் படுதோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி அவருக்கு ரூ.10 கோடி சம்பளத்தை பேசி உள்ளார்களாம். இதனால் வெங்கட் பிரபுவும் சற்று அப்செட்டாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் படம் கைநழுவி போனா என்ன... சைலண்டாக பான் இந்தியா ஸ்டார்களுக்கு ஸ்கெட்ச் போடும் அட்லீ?