வாரே... வா... தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லன் இவரா? அப்போ காத்திருக்கு செம்ம சம்பவம்!
இன்று தளபதி விஜய் நடிக்க உள்ள 68-ஆவது படம் குறித்த அறிவிப்பு, அதிகார பூர்வமாக வெளியான நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி 68, படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்கிற அறிவிப்பு இன்று வெளியாகியது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார்.
'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் இப்படம் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஏஜிஎஸ், தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த அற்புதமான கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சிம்பிள் லுக்.. காட்டன் சேலையில் கவர்ந்திழுக்கும் வாணி போஜன்! போட்டோஸ்..
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக #தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. விஜய்க்கு வில்லனாக நடிக்க, விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய, இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். விஜய்யின் அதிரடியான மாஸ் நடிப்பும், எஸ்.ஜே.சூர்யாவின் கிளாஸான வில்லத்தனமும் இணைந்தால்... வேற லெவலுக்கு இருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த தகவலுக்கு... சம்பவம் கார்த்திருக்கு என ரசிகர்களுக்கும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய 2500 பாடல்களுக்கு இசையமைத்த... இசையமைப்பாளர் ராஜ் அதிர்ச்சி மரணம்!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.