MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை வாஷ் அவுட் பண்ணிய வீர தீர சூரன்!

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை வாஷ் அவுட் பண்ணிய வீர தீர சூரன்!

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எம்புரான் படத்தை விட பன்மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Veera Dheera Sooran Beat Empuraan in Tamilnadu Box Office : மலையாளத்தில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன எம்புரான் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் வசூலில் மளமளவென முன்னேறி வருகிறது. வெளியான ஐந்து நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் மலையாளம் மட்டுமின்றி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 27ந் தேதி வெளியானது. அதே நாளில், விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் அன்று மாலையில் வெளியானாலும், பாக்ஸ் ஆபிஸில் வீர தீர சூரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

வசூலில் எம்புரானை ஓவர்டேக் செய்த வீர தீர சூரன்

தற்போது தமிழகத்தில் வேறு எந்தப் படமும் வெளியாகாததால், எம்புரான் மற்றும் வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களுமே போட்டி போட்டு வசூல் செய்து வருகின்றன. இந்நிலையில், இரண்டு படங்களும் ஆறாம் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழகத்தில் மட்டும் வீர தீர சூரன் 6ம் நாளில் 2.4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியளவில் மொத்தமாக இப்படம் 2.52 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. அதே நேரத்தில், எம்புரான் திரைப்படம் ஆறாம் நாளில் 5 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழகத்தில் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்... 3 மாசம் ஓவர்! 2025-ல் கோலிவுட் கொடுத்த ஹிட் படங்கள் எத்தனை தெரியுமா?

34

எம்புரான் படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

இதன் மூலம், எம்புரான் திரைப்படம் ஆறு நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து 7.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாள் 2.25 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், மற்ற நாட்களில் 9 லட்சம், 1.3 கோடி, 1.5 கோடி, 75 லட்சம், 5 லட்சம் என வசூல் செய்துள்ளது. தற்போது வீர தீர சூரன் திரைப்படம், தமிழ்நாட்டில் 2025ல் அதிக வசூல் செய்த நான்காவது படமாக உள்ளது. முதல் நாள் லேட்டாக ரிலீஸ் ஆனாலும், வீர தீர சூரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் தயாரிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இது விக்ரமின் நல்ல கம்பேக் படம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

44

வீர தீர சூரனுக்கு அடித்த ஜாக்பாட்

வீர தீர சூரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. உலகளவில் ரூ.50 கோடியைக் கடந்துவிட்ட இப்படம் 100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த வாரம் அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆவதால், இந்த வார இறுதியில் தமிழ்நாட்டில் புதுப்படங்கள் பெரியளவில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் வீர தீர சூரனின் வசூல் வேட்டை இந்த வாரமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரவுண்டு கட்டிய ரசிகர்கள்; சட்டென ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு ஜூட் விட்ட விக்ரம் - வீடியோ இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம்புரான்
வீர தீர சூரன் திரைப்படம்
நடிகர் விக்ரம்
மோகன்லால்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved