- Home
- Cinema
- பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தாமரைக்கு வருண் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்... என்னென்ன கொடுத்திருக்காரு பாருங்க
பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் தாமரைக்கு வருண் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்... என்னென்ன கொடுத்திருக்காரு பாருங்க
தாமரைச் செல்விக்கு வருண் செய்த இந்த உதவி குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, பைனலுக்கு முன் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாராகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார் தாமரை. கடந்த வாரம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் 5 முடிந்து வெளியே போனதும் தனக்கு கிடைத்த காஸ்ட்லி கிப்ட் குறித்து தாமரை நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதன்படி, சக போட்டியாளரான வருண், தனக்கு விலையுயர்ந்த டபுள் டோர் பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றை பரிசாக அளித்ததாக கூறினார்.
கடந்த சீசனின் போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது கேஸ் அடுப்பு ஜெயித்ததற்கே மிகவும் சந்தோஷப்பட்ட தாமரை, அந்த சமயத்தில் தனக்கு இங்கு இருப்பது போன்ற பிரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றை வாங்க வேண்டும் என கூறி இருந்தார். அதை மனதில் வைத்திருந்த வருண், அந்த பொருட்களை கிப்ட்டாக கொடுத்து தாமரைக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தாமரைச் செல்விக்கு வருண் செய்த இந்த உதவி குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். மேலும் தாமரை பிக்பாஸ் அல்டிமேட்டில் வருண் குறித்து பேசிய காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.