- Home
- Cinema
- வெளியான சில மணிநேரத்தில் காப்பி சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்
வெளியான சில மணிநேரத்தில் காப்பி சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமன் இசையில் சற்று முன் வெளியான ரஞ்சிதமே பாடல், காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில்.. நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில் தமன் இசையில், 'வாரிசு' படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல்... இன்று வெளியான நிலையில், வெளியான சில மணி நேரங்களில் இந்த பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
ரஞ்சிதமே பாடல்... தெலுங்கில் நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 'கிராக்' படத்தில் இடம்பெற்ற, மாஸ் பிரியாணி என்ற பாடல் மெட்டுடன் ஒத்து போவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். எனினும், இந்த படத்திற்கு தமன் தான் இசையமைத்திருந்தார் என்பதால், தன்னுடைய பாடல் மெட்டையை காப்பியடித்து 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு போட்டுள்ளார் என கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் நெட்டிசன்கள் இந்த பாடலை கலாய்த்து வந்தாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக ரஞ்சிதமே பாடல் ரீச் ஆகியுள்ளது. மேலும் இந்த பாடலில், விஜய் தன்னுடைய அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளது மட்டுமின்றி.. இந்த பாடலையும் அவரை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு விவேக் லிரிக்ஸ் எழுதியுள்ளார். ராஷ்மிகா மந்தனா மிகவும் ரொமான்டிக்காக, கவர்ச்சிக்கு குறைவில்லாமல் குத்தாட்டம் போட்டுள்ளார். சரத்குமார், பிரபு, குஷ்பூ, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.