தளபதியின் மிரட்டல் போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்! விஜய்யுடன் மோதுவதை உறுதி செய்வாரா அஜித்?
நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி படுமாஸாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், இந்த படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக விஜய் கைகோர்த்துள்ள திரைப்படம் 'வாரிசு'.
குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய், இரண்டு அண்ணன்களுக்கு தம்பியாக நடிக்க உள்ளார், குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த படத்தில், விஜய் ஆக்சன், காமெடி, காதல், என அனைத்தும் கலந்த கலவையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவார் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பிரபாஸ் ரசிகர்கள் செயலால் தீப்பிடித்து எறிந்த தியேட்டர்! உயிருக்கு பயந்து அங்கும் இங்கும் அலைமோதிய ரசிகர்கள்!
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக நடிகர் விஜய்யின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பிளாக் அண்ட் பிளாக்.... உடையில், பார்மல் பேன்ட் மற்றும் ஃபார்மல் ஷர்ட்டில் விஜய் படுமாஸாக கையில் சுத்தியை வைத்துக்கொண்டு நடந்து வருவது போல் உள்ளது.
மேலும் செய்திகள்: Samantha: ஓபன் நெக்கில்... முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மூச்சு முட்டவைத்த சமந்தா..! வேற லெவல் ஹாட் போஸ்..!
மேலும் இந்த போஸ்டரில், 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை அஜித்தின் துணிவு படக்குழு உறுதி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.