'சித்தி 2 ' சாராதவாக மாறுகிறாரா வரலட்சுமி? அவரே வெளியிட்ட உண்மை..!
சன் டிவி தொலைக்காட்சியில், தற்போது பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், சித்தி 2 சீரியலில் இருந்து, கணவரின் அரசியல் வளர்ச்சிக்கு பாடுபட, தற்போது சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலகியதை தொடர்ந்து, இவருக்கு பதிலாக உண்மையிலேயே சித்தியின் மகள்... வரலட்சுமி நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இது குறித்த உண்மை தகவலை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.
சன் டிவி தொலைக்காட்சியில் 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான ராதிகாவின் மிக முக்கிய சீரியல்களில் ஒன்று 'சித்தி'. சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருந்த இத்தொடர் அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு 'வாணி ராணி' சீரியல் முடிவடைந்த பின்னர், இவர் சரித்திர கதையை மையமாக வைத்து உருவான 'சந்திரகுமாரி' சீரியலில் நடித்து வந்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் பாதியிலேயே ராதிகா விலக, ராதிகாவின் கதாபாத்திரத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடித்தார்.
இந்த சீரியல் முடிந்த கையேடு, சித்தி 2 சீரியல் துவங்க பட்டது. தற்போது இல்லத்தரசியல் முதல், இளைஞர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால் மிகவும் தைரியமான பெண்மணியாக நடித்த ராதிகாவின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி என சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்கள் சிலர் நடிக்கலாம் என கூறப்பட்டது.
மேலும், திடீர் என... ராதிகாவிற்கு பதிலாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இதில் துளியும் உண்மை என வரலட்சுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.