- Home
- Cinema
- BiggBoss Ultimate : இனி இங்க இருக்க முடியாது... நான் கிளம்புறேன்! திடீரென வெளியேறிய வனிதா - காரணம் இதுதானாம்
BiggBoss Ultimate : இனி இங்க இருக்க முடியாது... நான் கிளம்புறேன்! திடீரென வெளியேறிய வனிதா - காரணம் இதுதானாம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறியதில் இருந்தே ஹவுஸ்மேட்ஸிடம் ஏடாகூடமாக பேசி சண்டையிட்டு வந்த வனிதா, தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் (KamalHaasan) தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கினார். அதுமட்டுமின்றி தற்போது நடந்து வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இயங்கி வருவதால், பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் (Kamal) அறிவித்தார். கமல் திடீரென விலகியதால் அவருக்கு பதில் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
ஏற்கனவே கமல் கொரோனா காரணாமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் நிலவியபோது அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஆதலால் அவரே தற்போது பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வந்தது. போட்டியாளர்களும் அவ்வாறே கணித்து வந்தனர். ஆனால் கமலுக்கு பதில் சிம்பு ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறியதில் இருந்தே ஹவுஸ்மேட்ஸிடம் ஏடாகூடமாக பேசி சண்டையிட்டு வந்த வனிதா, தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் தான் வருவார் என நினைத்து ‘என்னை வெளியே அனுப்பிவிடுங்கள்’ என கேட்டு வெளியேறிவிட்டாராம் வனிதா (Vanitha).
ஏற்கனவே பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்து தான் வனிதா வெளியேறி உள்ளாராம். ஆனால் சிம்பு (Simbu) தான் தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற விஷயம் தெரியாமலேயே வெளியேறி உள்ளார் வனிதா.
இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate : அடுத்த ஹோஸ்ட் இவரா?.. அப்போ வேறலெவல்ல இருக்குமே! - தீயாய் பரவும் தகவலால் ரசிகர்கள் குஷி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.