MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இறந்து போன வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டு காட்டாக இருந்த பணம்? ஷாக்கிங் தகவல்!

இறந்து போன வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டு காட்டாக இருந்த பணம்? ஷாக்கிங் தகவல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால், உயிரிழந்த நிலையில் அவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 02 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தளபதி விஜய்க்கு ஜோடியாக கடந்த 1995 ஆம் ஆண்டு, சந்திரலேகா என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், வனிதா விஜயகுமார். இதை தொடர்ந்து ராஜ்கிரணுக்கு ஜோடியாக மாணிக்கம், மற்றும் தெலுங்கு... மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தலா ஒரே ஒரு படம் மட்டுமே நடித்தார் வனிதா.
 

27

பின்னர் நாடகம் ஒன்றில் நடித்த போது தொழிலதிபரும், நடிகருமான ஆகாஷ் மீது காதல் வயப்பட்ட வனிதா, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் அவரை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் மூலம் வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

250 பேருக்கு வீடு..! தல - தளபதியை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி! உதவுவதில் மனுஷன் கர்ணனா இருக்காரே..!

37
vanitha vijayakumar

vanitha vijayakumar

விவாகரத்து பெற்றே அதே வருடம், ஆனந்த் ஜெயராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர் மூலமும் வனிதாவுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்த வாழ்க்கையும்நிலைக்கவில்லை, 5 வருடத்திலேயே இரண்டாம் கணவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றார். 

47

ஒரு சில காதல் சர்ச்சையில் சிக்கி மீண்ட வனிதா, கடந்த 2020 ஆம் ஆண்டு, கிராபிக்ஸ் விஷுவல் எடிட்டர் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 6 மாதம் கூட நிலைக்கவில்லை. பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்கிற ஒரு சர்ச்சை போய் கொண்டிருந்த நிலையில், அதிக மது மற்றும் புகைக்கு அடிக்ட் ஆனதால் வனிதா அவரை விட்டு பிரிந்தார்.

கழுத்தை நெரிந்த கடன்..! பிரபல நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!
 

57

பீட்டர் பாலை பிரிந்த பின்னர், தொடர்ந்து திரைப்படங்கள், சீரியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வரும் வனிதா, பேஷன் ட்ரெஸ்ஸஸ் விற்பனை செய்யும் கடை ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.  

67

இந்நிலையில் பீட்டர் பால்... ஏற்கனவே நுரையீரல் சார்ந்த பிரச்சனையால் அவதி பட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், உடல்நல குறைவால் உயிரிழந்தார். மேலும் வனிதாவும், பீட்டர் பால் பெயரை குறிப்பிடாமல் அவரது மறைவுக்கு தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

பேசியே ஜீரோவாகிறார் ரஜினிகாந்த்..! சூப்பர் ஸ்டாரை தாறுமாறான தாக்கி பேசிய நடிகை ரோஜா!

77

இந்த நிலையில் பீட்டர் பால் மறைவிற்கு பின்னர் அவரது உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு கட்டு கட்டாக பணம் இருந்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வனிதாவை விட்டு பிரிந்த பின்னர், குடிப்பழக்கம் இருந்தாலும்... திறமையாக வேலை செய்து இந்த பணத்தை தன்னுடைய முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்திருக்கலாம் என உருக்கமாக தெரிவித்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved