MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!

நடிகை வனிதா விஜயகுமார், பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில்... தன்னுடைய அம்மா மஞ்சுளா இறப்பதற்கு முன் மருத்துவமனையில் தன்னிடம் கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 25 2022, 09:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர், மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளா. 1970 ஆம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசன் நடித்த 'சாந்தி நிலையம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்ஷகாரன்' படத்தின் கதாநாயகியாக மாறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இதை தொடர்ந்து, சதி லீலாவது, இதய வீணை, மறுபிறவி, உலகம் சுற்றும் வாலிபன், நினைத்ததை முடிப்பேன், அன்பே ஆருயிரே, மன்னவன் வந்தானடி, என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Ivana Photos: பட்டு சேலை அழகில்... ரசிகர்களை பாடாய் படுத்தும் 'லவ் டுடே' நாயகி இவனா! ரீசென்ட் போட்டோஸ்..!

37

திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக இருந்த போதே... 1976 ஆம் ஆண்டு நடிகர் விஜயகுமாரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே முத்து கண்ணு என்கிற முதல் மனைவி இருந்த நிலையில், மனைவியின் சம்மதத்தோடு மஞ்சுளாவையும் மனம் முடித்தார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

47

நடிகர் விஜயகுமாருக்கு முதல் மனைவி மூலம் அருண் விஜய் என்கிற மகனும், கவிதா, அனிதா ஆகிய இரு மகளும் உள்ளனர். அதே போல் இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம்... வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். வனிதாவை தவிர மகன், மகள் என அனைவரிடமும் இணக்கமாக உள்ளார் என்பதும், வனிதாவை மீடியாவின் முன்பே தனக்கு அப்படி ஒரு மகள் இல்லை என கூறினார் என்பதை அனைவரும் அறிவர்.

Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?

57

இந்நிலையில் பலருக்கும் தெரியாத விஷயங்கள் குறித்து, வனிதா விஜயகுமார்... பிரபல ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னை மகள் இல்லை என தன்னுடைய அம்மா - அப்பா கூறினாலும், இந்த பிரச்சனை நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் தன்னிடம் அம்மா பேச துவங்கி விட்டார். அம்மா வீட்டிற்கு அழைத்ததால் அங்கு சென்றபோது தந்தையும் தன்னிடம் சமாதானம் ஆகிவிட்டார். இது குறித்து ஒரு பேட்டியில் கூட எங்கள் இடையே இருந்த பிரச்சனை பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக நான் கூறினேன் என பேசியுள்ளார்.

67

மேலும் தன்னுடைய அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் இருந்த போது, வழக்கறிஞரை கூப்பிடு உன்னை ஏமாற்றி விடுவார்கள். சொத்துகள் அனைத்திலும் உனக்கும் பங்கு இருக்க வேண்டும் என கூறினார். அதே போல் என்னை வீடியோ எடு என சொன்னார். அந்த நேரத்தில் முதலில் எனக்கு நீ தான் முக்கியம், அப்படி என்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றால் நன்றாக இருந்து விட்டு போகட்டும் என கூறினேன். 

Suriya Dance: நடிகர் சூர்யாவா இது? பிறந்தநாள் பார்ட்டியில் வெறித்தனமாக குத்தாட்டம் போடும் வீடியோ வைரல்..!

77

தன்னுடைய அம்மா மருத்துவமனையில் இருந்த போது, அவருடன் நான் தான் இருந்தேன்... அதன் பிறகு தான் அப்பா, உள்ளிட்ட அனைவருமே வந்தார்கள். அம்மா இறக்க போகிறார் என்பதை மருத்துவர் கூறிய பின்னர்... தன்னுடைய அப்பாவிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று தான் சொன்னார். அம்மா உயிருடன் இருக்கும் போது வேறு விதமாக பேசிய அப்பா, அவர் இறந்த பின்னர் அப்படியே மாறிவிட்டார் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV : வார வாரம் விஜய் படம் போட்டு TRP ஏத்தும் சன் டிவி... இந்த வாரம் என்ன படம் தெரியுமா?
Recommended image2
சினிமால இதெல்லாம் சகஜம்.! கியூட் ஹீரோ ஜூனைத் கான் ஓப்பன் டாக்.!
Recommended image3
Dragon : ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளில் வெளியான மிரட்டல் க்ளிம்ப்ஸ்! டிராகன் கதை என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved