இது யாருக்குமே தெரிஞ்சிருக்காது..! பீட்டர் பால் குறித்து வனிதா வெளியிட்ட உண்மை..!
பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும், பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.
பீட்டர் பால் மனைவி எலிசபெத்தின் பிரச்சனை வந்த போது... அவருக்கு சப்போர்ட் செய்த, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலருக்கும் பளார் பதிலடிகளால் தெறிக்கவிட்டார்.
பிள்ளைகளின் சம்மதத்தோடு, தன் வாழ்க்கை துணையை தேடி, எளிமையான முறையில் அவர் வீட்டில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதே நேரத்தில் இந்த திருமணம் செல்லாது என்பதையும் வனிதாவின் லாயர் தெரிவித்திருந்தார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது, பீட்டர் பாலுக்கு இருந்த புகைப்பழக்கமும், குடி பழக்கமும்.
இதுகுறித்து தற்போது வனிதா வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது, ஏற்கனவே பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். உண்மையில் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்க்கு லட்ச கணக்கில் செலவு ஆனாது.
இதை தொடர்ந்து மருத்துவர் அவரை சுத்தமாக புகைபிடிக்க கூடாது என கூறினார். ஆனால் அவர் அதையும் மீறி தன்னிடம் பொய் சொல்லிவிட்டு தனக்கு தெரியாமல் புகைபடித்து வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் இரும்பி கொண்டே இருந்து, ரத்த வாந்தி எடுப்பது போன்ற நிலைக்கு வந்தார்.
பின்னர் மருத்துவமனையில் கிட்ட தட்ட 15 நாட்கள் இருந்தார். பல லட்சம் செலவானது, இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார் வனிதா.
ஏற்கனவே இரண்டு முறை திருமணத்தில் தோல்வியை தழுவிய வனிதாவின் மூன்றாவது திருமண வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்ததற்கு இவரை விமர்சனம் செய்தவர்கள் கூட ஆறுதல் கூறி வருகிறார்கள்.