4 திருமணம் குறித்து பரவிய வதந்தி..! சிங்கிள் அண்ட் அவைலபிள் என பதில் கொடுத்த வனிதா விஜயகுமார்!
ஏற்கனவே மூன்று திருமணம் மற்றும் ஒரு காதல் தோல்வியை சந்தித்துள்ள வனிதா விஜயகுமார், நான்காவதாக ஒருவரை காதலித்து, ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, அதற்க்கு சமூக வலைத்தளம் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய வனிதா லைப், ஸ்மூத்தாக போய் கொண்டிருந்த நிலையில் தான், இவருக்குள் உள்ள சமையல் திறமையை வெளிக்காட்டும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, என பல பிரபலங்கள் கலந்து கொண்டாலும்... வனிதாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. பைனலில் யாரும் எதிர்பார்க்காத வனமாக, டைட்டில் வின்னர் பட்டத்தையும் கை பற்றினார். மேலும் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு ஓய்வு காரணமாக அணைத்து சினிமா பணிகளும் முடங்கியதால், வனிதா ஏற்கனவே சில பேட்டிகளில் தெரிவித்தது போல், யூடியூப் சேனல் ஒன்றை துவங்க தயாரானார். ஆரம்பத்தில் இதில் இவருக்கு சில பிரச்சனைகளும் வந்துள்ளது.
அப்போது வனிதாவுக்கு உதவியாகவும், நண்பராகவும் அறிமுகமானவர் தான் பீட்டர் பால். பின்னர் இவருடைய நட்பும் காதலாக உருவெடுத்துள்ளது. தனிமையில் வாழ்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி வனிதா, தன்னுடைய அப்பா - அம்மாவின் திருமண நாள் அன்றே, பீட்டர் பாலை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இவர்களுடைய திருமணம் ஜூன் 27 ஆம் தேதி, கிறிஸ்துவ முறைப்படி மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் ஒரு, நிச்சயதார்த்தம் போல் தான் என்றும், முறைப்படி செல்லாது என்பதையும் வனிதா தரப்பை சேர்ந்தவர்களே அறிவித்து விட்டனர்.
பின்னர் பல்வேறு பிரச்சனைகளை கடந்து பீட்டர் பாலுக்காக போராடிய வனிதா, பின்னர் அவர் குடித்து விட்டு கும்மாளம் போட துவங்கிய பின்னர் அவரை விட்டு பிரிந்தார்.
ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த பின்னர் 3 மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த திருமணமும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்தி ஒன்று பரவியது.
இதற்க்கு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ள வனிதா விஜயகுமார், நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப ’என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்விட்டரில் ஆகிவருகிறது