கொண்டை போட்டு அதில் மல்லி பூ... அசப்பில் 'விஸ்வாசம்' நயன்தாரா மாதிரியே போஸ் கொடுத்த வாணி போஜன்!
நடிகை வாணி போஜன் தற்போது சிவப்பு நிற பட்டு புடவையில்... கொண்டை போட்டு மல்லி பூ வைத்து நயன்தாரா லுக்கில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை வசீகரித்துள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.
சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் வாணி போஜன் தற்போது, பட்டு சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்துள்ளது.
சேலையை அலைபாய விட்டு இவர் கொடுத்துள்ள போசுகள் அல்டிமேட்
லைட் மேக்அப் போட்டு... நெற்றியில் போட்டு, பூ வைத்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த ஸ்டைலிஷ் நாயகியின் ஒவ்வொரு போசுகளும் வேற லெவல்
சின்னத்திரை நயன்தாரான சும்மாவா... அசைப்புல அப்படியே இருக்காங்களே