MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூலில் கேம் சேஞ்சரை ஓவர்டேக் செய்த வணங்கான் - இரண்டே நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

வசூலில் கேம் சேஞ்சரை ஓவர்டேக் செய்த வணங்கான் - இரண்டே நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

பாலா இயக்கத்தில் வெளியாகி உள்ள வணங்கான் திரைப்படம் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தை விட அதிக வசூலை தமிழ்நாட்டில் வாரிக்குவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 12 2025, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vanangaan vs Game Changer

Vanangaan vs Game Changer

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அவர் இயக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில், தற்போது வணங்கான் திரைப்படம் மூலம் ரீ.எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து இயக்கிய பாலா, பின்னர் அவரை வைத்து பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக இருந்ததால், அவரை நீக்கிவிட்டு அருண் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தார்.

24
Vanangaan

Vanangaan

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள முதல் படம் வணங்கான். இப்படத்தில் அருண் விஜய் கோட்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய் ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 10ந் தேதி திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பஞ்சர் ஆன கேம் சேஞ்சர்; 2ம் நாள் வசூல் இவ்வளவுதானா?

34
Bala, Arun VIjay

Bala, Arun VIjay

வணங்கான் திரைப்படத்துக்கு போட்டியாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படமும் ரிலீஸ் ஆனது. இது பான் இந்தியா படம் என்பதால் இப்படத்திற்கும் தமிழ்நாட்டில் அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் கேம் சேஞ்சர் படத்துக்கு தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் கிடைத்த வரவேற்பை காட்டிலும் தமிழில் மிகவும் கம்மி தான். இப்படம் இரண்டாம் நாளில் வெறும் ரூ.1.7 கோடி மட்டுமே தமிழ்நாட்டில் வசூலித்து இருந்தது.

44
Vanangaan Box Office Collection

Vanangaan Box Office Collection

ஆனால் வணங்கான் படம் முதல் நாளில் வெறும் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்திருந்த நிலையில், அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இரண்டாம் நாளில் வசூல் பிக் அப் ஆகி உள்ளது. அதன் படி இரண்டாம் நாளில் இப்படம் ரூ.2 கோடி வசூலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாம் நாள் வசூலைவிட வணங்கான் பட வசூல் அதிகம். தற்போது வரை ரூ.3.5 கோடி வசூலித்துள்ள வணங்கான் திரைப்படம் அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பொங்கல் வின்னர் ஆனாரா மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அருண் விஜய்
இயக்குநர் பாலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved