பாக்ஸ் ஆபிஸில் பஞ்சர் ஆன கேம் சேஞ்சர்; 2ம் நாள் வசூல் இவ்வளவுதானா?
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Game Changer
தமிழ் திரையுலகில் பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய ஷங்கர், தெலுங்கில் முதன்முறையாக இயக்கிய படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.
Kiara Advani, Ram charan
கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இப்படத்தின் பாடல்களுக்காக மட்டும் ரூ.90 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது படக்குழு. இம்புட்டு செலவு செய்து எடுத்தும் ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சியை படத்தில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கிவிட்டனர். நானா ஹைரானா என்கிற அந்த பாடல் ரிலீசுக்கு முன்பே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்பாடலை மட்டும் படமாக்க ரூ.25 கோடி செலவானதாம். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அப்பாடலை நீக்கிவிட்டனர்.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் இவ்வளவா? ஐஏஎஸ் அதிகாரி, எலக்ஷன் ஆபிசராக வசூல் வேட்டையாடிய ராம் சரண்!
Game Changer Hero Ramcharan
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையது. அதற்கு திரைக்கதை அமைத்து ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷங்கர் படம் என்றாலே விறுவிறுப்பான திரைக்கதை உடன் இருக்கும், ஆனால் இப்படம் அதில் சற்று சொதப்பியதால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
Game Changer Day 2 Box Office Collection
விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடிய கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.186 கோடி வசூலை வாரிக் குவித்ததாக படக்குழுவே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் 2ம் நாளில் அதில் பாதி கூட வசூலிக்கவில்லையாம். இரண்டாம் நாள் வசூலில் 58 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் உலகளவில் ரூ.80 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் கேம் சேஞ்சர் படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் என்னுடைய Lifetime Achievement – சமுத்திரக்கனி!