வெளியாவதற்கு முன்பே மாஸ்டரை தொம்சம் செய்த வலிமை..மாஸ் கொண்டாட்டத்தில் அஜித் பேன்ஸ்..
வலிமை படம் வெளியவதற்கு முன்பே விஜயின் மாஸ்டர் ரெக்கார்டை முறியடித்துள்ளது...இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்...

valimai
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் (Boney Kapoor) தயாரித்துள்ளார்.
valimai
குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
Valimai
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார்.
Valimai
யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
Valimai
நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரிலீஸ் நெருங்கி வருவதால் இதற்கான புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.
Valimai
கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் புரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Valimai
இதுதவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
master unseen
இந்நிலையில் வலிமை படம் வெளியவதற்கு முன்பே விஜயின் மாஸ்டர் ரெக்கார்டை முறியடித்துள்ளது...இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்...
valimai
அதாவது மாஸ்டர் படம் வெளியான பிறகு சுமார் ரூ.223 கோடிகளை குவித்திருந்தது...ஆனால் வலிமை வெளிவருவதற்கு முன்னரே ப்ரி புக்கிங் மூலம் ரூ.300 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது...