- Home
- Cinema
- Valimai : அஜித் கீழ விழுந்ததெல்லாம் விடுங்க... 'வலிமை' மேக்கிங் வீடியோவில் இதை கவனிச்சீங்களா?
Valimai : அஜித் கீழ விழுந்ததெல்லாம் விடுங்க... 'வலிமை' மேக்கிங் வீடியோவில் இதை கவனிச்சீங்களா?
போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள வலிமை (Valimai) படத்தின் மேக்கிங் வீடியோவில் (Valimai making video) பல்வேறு தகவல்கள் ஒளிந்திருக்கின்றன, அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வலிமை படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளது தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. அதில் அவர் காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் வீடியோ மூலம் அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு மிகவும் பிடித்தமான பைக் சேஸிங் காட்சிகள் அதிகளவில் இடம்பெற்று உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சிகள் இதற்குமுன் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெறாத நிலையில், தற்போது முதன்முறையாக மேக்கிங் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.
வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார்.
தெலுங்கில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ள இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
மேக்கிங் வீடியோவில் நடிகர் கார்த்திகேயா உடம்பு முழுவதும் டாட்டூ குத்தி உள்ளார். அதில் ‘சாத்தானின் அடிமை’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் இப்படம் சாத்தான்களைப் பற்றிய கதையாக இருக்கும் என தெரியவந்துள்ளது.