நயன்தாராவின் டெஸ்ட் படத்தால் நெட்பிளிக்ஸுக்கு இத்தனை கோடி நஷ்டமா?
நயன்தாரா நடிப்பில் இந்த மாதம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆன டெஸ்ட் திரைப்படத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாம்.

Nayanthara Test Movie Loss : லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வந்த நயன்தாரா, அண்மையில் தனக்கு அந்த பட்டம் வேண்டாம் என தூக்கியெறிந்தார். அவர் இந்த பட்டத்தை தூக்கியெறிந்த பின்னர் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன படம் டெஸ்ட். இப்படத்தை சசிகாந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் நயன்தாரா உடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் 4ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
Test Movie
ஓடிடியில் ரிலீஸ் ஆன Test திரைப்படம்
டெஸ்ட் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் அப்படத்தை ஆஹா... ஓஹோ என பில்டப் கொடுக்கப்பட்டாலும், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. இதனால் நல்ல வேளை இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்று கமெண்ட் செய்தவர்களும் ஏராளம். நயன்தாரா நடிப்பில் இதுவரை ஓடிடியில் நெற்றிக்கண், ஓ2, மூக்குத்தி அம்மன், டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ரிலீஸ் ஆகின. இதில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் மட்டுமே வெற்றியடைந்தது. மற்ற படங்கள் தோல்வியை தழுவின.
இதையும் படியுங்கள்... என்கூட நடிக்க மாட்டாராம்; டெஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட கதையை சொன்ன எஸ்.வி சேகர்!
Test Movie Loss
Nayanthara-வின் டெஸ்ட் படத்தால் நஷ்டம் எவ்வளவு?
இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டெஸ்ட் திரைப்படத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார். டெஸ்ட் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடி கொடுத்து வாங்கியதாம். ஆனால் அப்படத்தின் மூலம் நெட்பிளிக்ஸுக்கு 5 கோடி கூட லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 50 கோடி வரை நஷ்டமடைந்துள்ளதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
Nayanthara
கம்பேக் கொடுப்பாரா Nayanthara?
நயன்தாரா தமிழில் நடித்து கடைசியாக வெளிவந்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை தான் சந்தித்துள்ளன. இதனால் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் நயன். அவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டாக உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இப்படத்தின் மூலம் நயன்தாரா கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்கள்... ஆத்தாடி... நடிகை நயன்தாரா கைவசம் உள்ள படங்கள் இத்தனையா?