- Home
- Cinema
- நடனப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடனப்புயல் உடன் இணைந்த வைகைப்புயல்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, கம்பேக் கொடுக்க உள்ள திரைப்படம் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சிவாங்கி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... லவ் டுடே படம் பார்த்து சிம்பு அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்
இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் அப்பத்தா எனும் பாடல் நாளை நவம்பர் 14-ந் தேதி மாலை 7 மணிக்கு ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட துர்கா ஸ்டாலின்! பதிலுக்கு முதல்வர் கொடுத்த அல்டிமேட் ரிப்ளை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.