அட... வடிவேலுவா இப்படி!!..வைகை புயல் பட வாய்ப்புகளை இழக்க இதுவும் காரணமா?...
தான் நினைத்ததை தான் படத்தில் வைக்க வேண்டும் என்றும், அவர் கூறிய நடிகைகளுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கூறி வந்துள்ளாராம் வடிவேலு.
vadivelu
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் வடிவேலு. ஆனால் பல பிரச்சனைகளால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார்.
vadivelu
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
vadivelu
இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு
vadivelu
சமீபத்தில் அவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர்
vadivelu
முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
vadivelu
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவிவுக்கு கொரோனா தொற்று ஏற்படவே அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
vadivelu
நாய் சேகர் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதியுடன் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வடிவேலு குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
vadivelu
புகழின் உச்சத்தில் இருந்த வடிவேலு அப்போது ரொம்பவும் அதிகாரத் தோரணையோடு நடந்து கொண்டதாக பேசப்படுகிறது. அவர் நினைத்ததை தான் படத்தில் வைக்க வேண்டும் என்றும், அவர் கூறிய நடிகைகளுக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கூறி வந்தாராம்.
vadivelu
சந்திரமுகி படத்திற்காக டைரக்டர் பி வாசுவிடம், வடிவேலு தகராறு செய்துள்ளார். அந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக சுவர்ணா மேத்யூஸ் என்ற நடிகையை தான் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென கறாராக பேசியுள்ளார். இதனால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த நடிகைக்கு பதிலாக சொர்ணாவை வாசு ஒப்பந்தம் செய்துள்ளாராம்.