- Home
- Cinema
- காமெடிக்கு ரெஸ்ட் விட்டு கொடூர வில்லனாக களமிறங்கும் வடிவேலு... இதென்னப்பா புது டுவிஸ்ட்டா இருக்கு..!
காமெடிக்கு ரெஸ்ட் விட்டு கொடூர வில்லனாக களமிறங்கும் வடிவேலு... இதென்னப்பா புது டுவிஸ்ட்டா இருக்கு..!
நகைச்சுவை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்திய வடிவேலு, தற்போது முதன்முறையாக கொடூர வில்லனாக நடிக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். கடந்த ஆண்டு இவர் மீதான ரெட் கார்டு விலக்கிக்கொண்டதன் காரணமாக தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார். சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!
இதுதவிர மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்து அசத்தி இருக்கிறார். இதுபோக சந்திரமுகி 2, விஜய் சேதுபதியுடன் ஒரு படம், ரஜினியுடன் ஒரு படம் என வடிவேலு அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அதுவும் வில்லனாக நடிக்கப்போகிறாராம்.
இந்த தகவல் கேட்டதும் அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. அவர் கொடூர வில்லனாக நடிக்க உள்ள படத்தை தில்லுக்கு துட்டு படத்தின் இயக்குனர் ராம்பாலா இயக்க உள்ளாராம். கதை கேட்டதும் பிடித்துப் போனதால் உடனடியாக நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம் வடிவேலு. இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறாராம்.
தூரத்துல இருந்து பார்த்தா தான்டா காமெடியா இருப்பேன்... பக்கத்துல பார்த்தா டெரரா இருப்பேன்னு தலைநகரம் படத்தில் வடிவேலு பேசிய டயலாக்கிற்கு விழுந்து விழுந்து சிரித்த மக்கள், அவரை கொடூர வில்லனாக ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட ‘குந்தவை’ திரிஷா... வைரலாகும் வீடியோ