மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த வடிவேலு... செம அப்செட் ஆன ‘சந்திரமுகி 2’ இயக்குனர்..!
நகைச்சுவை நடிகர் வடிவேலு, படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சந்திரமுகி 2 படத்தின் இயக்குனர் பி.வாசு கடும் கோபத்தில் உள்ளாராம்.

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, நாசர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் வசூலிலும் மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் முக்கிய பங்காற்றி இருந்தது.
தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினி, ஜோதிகா ஆகியோர் நடிக்க மறுத்துவிட்டதால் அவர்களுக்கு பதில் ராகவா லாரன்ஸையும், கங்கனா ரனாவத்தையும் நடிக்க வைத்திருக்கிறார் பி.வாசு. முதல் பாகத்தில் கலக்கிய வடிவேலு இதிலும் காமெடியனாக நடிக்க கமிட் ஆனார்.
இதையும் படியுங்கள்... திரும்பிய இடமெல்லாம் பனி... வாவ் என்ன ஒரு அழகு..! இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்
முதலில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. பின்னர் அந்நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகியதால் லைகா நிறுவனம் கைக்கு சென்றது சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மைசூரில் நடந்த ஷூட்டிங்கில் லாரன்ஸ் உடன் வடிவேலு, ராதிகா ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வராமல், இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என சொல்லி வடிவேலு காலம்கடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வடிவேலு மீது மிகவும் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர் பி.வாசு. வடிவேலுவின் இந்த செயலால் ஆத்திரமடைந்த அவர், படத்தின் அவரின் காட்சிகளை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.
வடிவேலுவின் இந்த செயல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் தடைக்கு பின்னர் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு மீண்டும் இப்படி செய்யலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் கவின் கலக்கினாரா? சொதப்பினாரா?... டாடா படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம் இதோ