- Home
- Cinema
- Vaa Vaathiyaar Day 2 Box Office : கார்த்திக்கு வந்த சோதனை.. வா வாத்தியார் 2வது நாள் வசூல் இவ்வளவுதானா?
Vaa Vaathiyaar Day 2 Box Office : கார்த்திக்கு வந்த சோதனை.. வா வாத்தியார் 2வது நாள் வசூல் இவ்வளவுதானா?
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வா வாத்தியர் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Vaa Vaathiyaar Day 2 Box Office
நடிகர் கார்த்தி நடிப்பில் 'வா வாத்தியார்' திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். ராஜ்கிரண், ஆனந்தராஜ் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
வா வாத்தியார் படம்
இந்தப் படத்தில் கார்த்தி எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். கீர்த்தி ஷெட்டியின் ரோல் வலிமையாக இல்லாதது படத்திற்கு சின்ன பின்னடைவு. அதுபோல சத்யராஜின் வில்லன் கதாபாத்திரமும் எதிர்பார்த்த அளவிற்க்கு இல்லை.
நெகடிவ் விமர்சனம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. நலன் குமாரசாமி இதற்கு முன்னர் இயக்கிய படங்களை காட்டிலும் இப்படம் மிகவும் சுமாராக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் பாடல்களும் ரசிக்கும்படி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சொதப்பும் வசூல்
இந்நிலையில் இரண்டு நாட்களை கடந்திருக்கும் வா வாத்தியர் திரைப்படமானது உலகளவில் வெறும் ரூபாய் 6+ கோடியே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பொங்கல் விடுமுறையிலும் இப்படம் வசூலில் பிக் அப் ஆகாததால் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

