AK 61 எப்போ ரிலீஸ் தெரியுமா?...இந்த வருட திருவிழா அஜித்துடன் தான்..
அஜித்குமாரின் 61 வது படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட 70 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பிறகு ரிலீஸ் குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது.

AK61
சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நேர்கொண்ட பார்வை இயக்குனர் எச்.வினோத் மீண்டும் இந்த படத்தை இயக்கி இருந்தார்.
AK61
போனி கபூர் தயாரித்திருந்தார் இந்த படம் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தன.
Ajith
கிட்டத்தட்ட 150 கோடியில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 200 கோடியை வசூல் செய்தது. அதோடு படம் வெளியான மூன்று நாட்களில் மட்டும் 100 கோடியை அள்ளி சாதனை படைத்தது.
AJITH 61
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் கமிட் ஆகியுள்ளார். இந்த படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது.
AJITH 61
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, அஜித் இந்த திரைப்படத்தில், நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். என சொல்லப்படும் இந்த படத்திற்காக மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட்டப் அமைக்கப்பட்டுள்ளது.
AJITH 61
A K 61 படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஜிப்ரான், எடிட்டர் விஜய் வேலுமணி, ஸ்டண்ட் சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்புராயன் மற்றும் பல்வேறு பணிகளுக்கான பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
AJITH 61
வங்கி கொல்லை தொடர்பான இந்த கதைக்களத்திற்காக வாங்கி செட் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 75 நாட்கள் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
AJITH 61
மீண்டும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் விதமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல் சொல்கிறது.