இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பலரும் அறியாத உண்மைகள்... சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ...!
First Published Jan 6, 2021, 5:05 PM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி யாரும் பெரிதாக அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இதோ...

அப்பாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தாலும், அவர் கனவு கண்டது என்னவோ கம்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தான்.

தந்தையின் மறைவிற்கு பிறகு குடும்பம் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனவே இளம் வயதிலேயே ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்த ரகுமான், பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?