“கல்யாண பிசியில் புரமோஷனுக்கே வரல.. இதையாவது பண்ணிருக்கலாம்..” தயாரிப்பாளரை புலம்ப விட்ட அர்ஜுன் மருமகன்..
அர்ஜுன் மகளை திருமணம் செய்து கொள்ளும் பிசியில் தான் நடித்த பித்தல மாத்தி படத்தை புரோமோட் செய்ய அப்படத்தின் ஹீரோ உமாபதி வரவே இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் புலம்பி உள்ளார்.
Umapathy ramaiah Aishwarya Arjun Arjun Sarja
அர்ஜுன் மகளை திருமணம் செய்து கொள்ளும் பிசியில் தான் நடித்த பித்தல மாத்தி படத்தை புரோமோட் செய்ய அப்படத்தின் ஹீரோ உமாபதி வரவே இல்லை என்று படத்தின் தயாரிப்பாளர் புலம்பி உள்ளார். தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஜூன் 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூன் 14-ம் தேதி நடைபெற்றது.
பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வரும் உமாபதிக்கு பெரிதாக எந்த படமும் ஓடவில்லை. ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற உமாபதி நடிகர் அர்ஜுனின் மகளை காதலிக்க தொடங்கினார். இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டனர்.
மாணிக் வித்யா இயக்கத்தில் உருவான பித்தளை மாத்தி என்ற படத்தில் உமாபதி நடித்தார். இதில் தம்பி ராமையா, தேவ தர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சரவணன் என்பவர் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா படத்துடன் பித்தளை மாத்தி படமும் வெளியானது. ஆனால் இந்த படம் வெளியானதே பலருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த படம் வெளியானதே பலருக்கும் தெரியாதது தான் வருத்தம் என்று படத்தின் தயாரிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். முதல் நாளில் 22 பேர் வந்து, படத்தின் காட்சியை திரையரங்கு உரிமையாளர்கள் ரத்துசெய்துவிட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “ அர்ஜுன் மகளை உமாபதி ராமையா திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண பிசியில் படத்திற்கான புரமோஷன் எதையும் அவர் செய்யவில்லை. எல்லா நடிகர்களும் படத்தை கை கழுவி விட்டனர். பணம் போட்ட தயாரிப்பாளராக நான் மட்டுமே தியேட்டர் தியேட்டராக சென்று படத்தை தக்க வைக்க முயற்சித்து வருகிறேன்.
உமாபதி ஒரு வீடியோவாது போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்திருக்கலாம். நான் என்ன சூப்பர் ஸ்டாரை வைத்தா படம் தயாரித்தேன்.. ஒரு சாதாரண ஹீரோவை வைத்து தான் தயாரித்தேன். முதல் நாளிலேயே இந்த படம் ஓடும் என்று சொல்ல முடியாது. கொஞ்சம், கொஞ்சமாக தான் மக்கள் கூட்டம் படத்திற்கு வருவார்கள். ஆனால் அதற்கு முன்பே படத்தை தியேட்டர்களில் இருந்து நீக்கிவிட்டால் என்ன செய்வது” என்று தயாரிப்பாளர் புலம்பி உள்ளார்.