- Home
- Cinema
- கியூட் குழந்தை முதல் அல்டிமேட் ஸ்டார் வரை..! பலரும் பார்த்திடாத அஜித்தின் அரிய புகைப்பட தொகுப்பு!
கியூட் குழந்தை முதல் அல்டிமேட் ஸ்டார் வரை..! பலரும் பார்த்திடாத அஜித்தின் அரிய புகைப்பட தொகுப்பு!
தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத இடத்தை பிடித்த ஒரு சில நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர். எந்த ஒரு திரையுலக பின்புலமும் இல்லாமல், பல்வேறு பிரச்சனைகளை கடந்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர். இன்று அவருக்கு 50 ஆவது பிறந்த நாள். 'வலிமை' குறித்த எவ்வித அப்டேட் இல்லை என்றாலும், தல பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அஜித்தின் இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

ஐதராபாத்தில், பாலக்காடு சுப்ரமணிய அய்யருக்கும் சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினிக்கும் இரண்டாவது மகனாக, மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தவர் அஜித்.

அஜித் ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.

அஜித் ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார் அஜித், ஆனால் படிப்பில் பெரிய அளவில் அவருக்கு ஆர்வம் இல்லை.

ajith

எப்போதும் துறுதுறுவென ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இருப்பவர். குறிப்பாக தனக்கு பிடித்தவற்றை மட்டுமே செய்யும் இயல்பும் கொண்டவர்.

தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு அஜித், மெக்கானி சம்பந்தமான படிப்பை தேர்வு செய்து படித்தது மட்டும் இன்றி, மெக்கானிக்காகவும் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அன்று முதல், தற்போது வரை இவருக்கு அலாதி ஆர்வம் தான்.

அஜித்தின் வசீகர தோற்றமும், வித்தியாசமான குரலும் அவரை மீடியாவின் பக்கம் இழுத்தது. மாடலிங், விளம்பர படம், என்று நடிக்க துவங்கி பின் திரையுலகிலும் நுழைந்தார். குறிப்பாக தூர்தர்ஷனில் ஒளிபரப்பான விளம்பரப்படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது எனலாம்.

பைக் ரேஸிங், மற்றும் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த அஜித் ஒரு நிலையில், சினிமாவை தன்னுடைய தொழிலாக தேர்வு செய்தார்.

தன்னுடைய 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜித் , அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பு நழுவியது. பின்னர், 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதைப் பெற்றுத்தந்தது.

அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். அஜித்தின் சினிமா பயணம் தொடர்ந்தது. 1995ல் வெளிவந்த ஆசை அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அஜித்துக்காக ரசிகர்களும் ஆசை படத்திற்கு பிறகே அதிகரிக்க துவங்கினர். இந்த படத்திற்கு பின், காதல் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்காமல், அக்ஷன் படங்களிலும் கவனம் செலுத்தினார். டூப் போட்டு நடிக்கும் நடிகர்கள் மத்தியில், எவ்வித டூப்பும் இல்லாமல் அக்ஷன் காட்சியில் இவர் நடித்து அசத்தியது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

சினிமாவில் நிலையான இடத்தை பிடித்து விட்டாலும், அஜித் கார் மற்றும் பைக் ரேஸில் ஆர்வம் காட்டுவதில் பின்வாங்கியதே இல்லை. ஒருமுறை நடந்த விபத்தின் காரணமாக அவரது முதுகு தண்டில் பலமாக அடி பட்டது, இதன் காரணமாக சில ஆண்டுகள் திரையுலகில் நடிக்காமல் இருந்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் போதும் அஜித்தை முன்பு எப்படி ரசிகர்கள் நேசித்தார்களோ அதே போல் நேசித்தனர்.

அஜித், ரசிகர் மன்றங்களை களைத்த பின்பும்... அதனை நற்பணி மன்றங்களாக மாற்றி பல்வேறு உதவிகளை அஜித் ரசிகர்கள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தல -யின் 50 ஆவது பிறந்தநாளை ஜமாய்த்து வருகிறார்கள்.