MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தியேட்டர்களை ஆக்கிரமித்த மாவீரன்... வேறுவழியின்றி ஓடிடிக்கு சென்ற மாமன்னன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

தியேட்டர்களை ஆக்கிரமித்த மாவீரன்... வேறுவழியின்றி ஓடிடிக்கு சென்ற மாமன்னன் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 18 2023, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறை பற்றி வெளிப்படையாக பேசி பாராட்டுக்களை பெற்றார் மாரி செல்வராஜ். இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்து அதிலும் வெற்றிவாகை சூடினார் மாரி செல்வராஜ்.

24
maamannan

maamannan

கர்ணன் படத்தின் வெற்றிக்கு பின்னர் துருவ் விக்ரமை வைத்து கபடி சம்பந்தமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் மாரி செல்வராஜ், அந்த சமயத்தில் அவரை அழைத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய கடைசி படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மாரி செல்வராஜ் கமிட் ஆன திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதியின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இதனை உருவாக்கி இருந்தனர்.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டாம் குரூஸிடம் வேலை பார்க்கும் பிரபல தமிழ் நடிகையின் மகள் - இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே

34
maamannan

maamannan

உதயநிதி உடன் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், ரவீனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனால் உதயநிதியின் கெரியரில் அதிக வசூலை வாரிக்குவித்த படம் என்கிற பெருமையை மாமன்னன் பெற்றுள்ளது. தமிழில் ஹிட் ஆனதை அடுத்து இப்படத்தை டப்பிங் செய்து கடந்த ஜூலை 14-ந் தேதி தெலுங்கில் ரிலீஸ் செய்தனர். 

44
maamannan

maamannan

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் ரிலீசாகி நான்கு நாட்களே ஆகும் நிலையில், அப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை தற்போது திடீரென அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற ஜூலை 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாமன்னன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர்களில் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆக்கிரமித்து உள்ள காரணத்தால் தான் சீக்கிரமாகவே மாமன்னன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் வருகின்றார் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. உருவாகும் ஜென்டில் மேன் 2 - கவிப்பேரரசு கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image2
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Recommended image3
சிவாஜிக்கு ஒரு குரல்.. எம்.ஜி.ஆருக்கு ஒரு குரல்! நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய டி.எம்.எஸ் - வியக்க வைக்கும் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved