ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டாம் குரூஸிடம் வேலை பார்க்கும் பிரபல தமிழ் நடிகையின் மகள் - இவ்ளோநாள் இதுதெரியாம போச்சே
ஹாலிவுட்டில் அதிரடியான ஆக்ஷன் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன டாம் குரூஸிடம் பிரபல தமிழ் நடிகையின் மகள் பணியாற்றி வருகிறாராம்.
Tom Cruise
தமிழ் திரையுலகில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வந்தவர் குட்டி பத்மினி. 3 வயதிலேயே சினிமாவில் நடிக்கத்தொடங்கிய இவர், சிறுவயதிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஜெமினி கணேசன், ஜெய் சங்கர் ஆகியோருடனும் நடித்திருக்கிறார் நடிகை குட்டி பத்மினி.
kutty padmini
தமிழ்நாட்டில் இருந்து தேசிய விருது வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரம் என்கிற சாதனைக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்து வருகிறார் குட்டி பத்மினி. இவர் குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் கலக்கிய குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
இதையும் படியுங்கள்... மீண்டும் வருகின்றார் பிரம்மாண்ட தயாரிப்பாளர்.. உருவாகும் ஜென்டில் மேன் 2 - கவிப்பேரரசு கொடுத்த அப்டேட்!
kutty padmini
சினிமாவைப் போல் சின்னத்திரையிலும் கலக்கிய இவர் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இதுதவிர நடிகர் சங்கத்திலும் முக்கிய உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். நடிகை குட்டி பத்மினி இரண்டு முறை திருமணம் ஆனவர். இவரின் முதல் கணவர் மதுவுக்கு அடிமையானதால் அவரை பிரிந்து, பிரபு என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் பிரபுவுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு குட்டி பத்மினியை பிரிந்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
kutty padmini
இந்நிலையில், நடிகை குட்டி பத்மினியின் மகள்கள் பற்றி ஒரு ஆச்சர்ய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அவரின் மூத்த மகள் எழுத்தாளராக பணியாற்றி வருகிறாராம். இரண்டாவது மகள் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். அதுவும் யாருடன் என்பது தான் ஹைலைட்டே. அவர் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு தான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம். மகள்கள் வெளிநாட்டில் செட்டில் ஆனாலும், தனக்கு தமிழ்நாட்டை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாததால் இங்கேயே வசித்து வருகிறார் குட்டி பத்மினி.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் பிரம்மாண்ட Promotion.. பணத்தை வாரி இறைக்கும் Project K பட தயாரிப்பு நிறுவனம் - யாருப்பா அவங்க?