அமெரிக்காவில் பிரம்மாண்ட Promotion.. பணத்தை வாரி இறைக்கும் Project K பட தயாரிப்பு நிறுவனம் - யாருப்பா அவங்க?
அமெரிக்காவில் பிரபாஸை வரவேற்க கார் rally ஒன்றை ஏற்பாடு செய்து, ப்ராஜெக்ட் K படத்தின் Glimpse காட்சிக்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது.
கீர்த்தி சுரேஷின் மகாநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தான் நாக் அஸ்வின், இவருடைய இயக்கத்தில் புதிதாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் ப்ராஜெக்ட் K. இந்திய சினிமா வரலாற்றில் அதிகபட்சமான பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், தெலுங்கு நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் வெகு வருடங்கள் கழித்து ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் வருகிற ஜூலை 20ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஒரு Glimpse காட்சி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது, அது ஜூலை 21ம் தேதி இந்தியாவிலும் வெளியிடப்பட உள்ளது. இதற்காக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உலகநாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் பிரபாஸ் உள்ளிட்டோர் அமெரிக்கா செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் பிரபாஸை வரவேற்க கார் rally ஒன்றை ஏற்பாடு செய்து, ப்ராஜெக்ட் K படத்தின் Glimpse காட்சிக்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. ஆனால் இவை அனைத்தும் இந்த படத்தின் டைட்டில் வெளியிடுவதற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த வைஜெயந்தி மூவிஸ்?
பொதுவாக படம் எடுத்து முடித்த பிறகு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்வது வழக்கம், ஆனால் படம் துவங்கும் முன்பே இவ்வளவு பெரிய அளவில் ப்ரோமோஷனை செய்து வருகிறது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ். தெலுங்கு திரை உலகில் பிரபலமாக உள்ள பல பட தயாரிப்பு நிறுவனங்களில் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமும் ஒன்று.
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் NTR அவர்களின் பல திரைப்படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியான மகாநதி மற்றும் துல்கர் சல்மானின் சீதா ராமம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டதும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தான். தற்பொழுது சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ப்ராஜெக்ட் கே படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம் உருவாக்க உள்ளது.
சுமார் 48 ஆண்டு காலத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் அஸ்வின் தத் என்பவரால் இந்த தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்திய அளவில் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ப்ராஜெக்ட் கே படத்திற்காக பரபரப்பாக தயாராகி வரும் இந்த நேரத்தில் தீபிகா படுகோனே அவர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் ஒன்றையும் வெளியிட்டு அசத்தியுள்ளது.