TRP ரேட்டிங்: நெருங்க முடியாத இடத்தில் சன் டிவி.. திணறும் விஜய் டிவி சீரியல்கள்
ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாவது வழக்கம். அந்த வகையில் ஜூன் 6 முதல் 12 வரை ஒளிபரப்பான சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகி உள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
TRP Rating June Second Week
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை தொடங்கி இரவு வரை பல்வேறு டிவி சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி முன்னணியில் இருக்கிறது. இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இரு சேனல்களின் சீரியல்களும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வருகின்றன. சீரியல் ரசிகர்களும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதல் மூன்று இடங்களைப் பிடித்த சன் டிவி
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் 23-வது வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் பத்து இடங்களை பிடித்து இருக்கும் சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் வழக்கம்போல் முதல் மூன்று இடங்களை சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் பிடித்துள்ளது. கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சீரியல்களை ஒளிபரப்பில் மக்களை கவர்ந்திருக்கும் சன் டிவி தற்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சாதனை புரிந்து வருகிறது. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சன் தொலைக்காட்சிக்கு நிகரான போட்டியை கொடுக்கும் போதிலும், அவற்றால் டிஆர்பி ரேட்டிங்கில் சன் தொலைக்காட்சியை முந்த முடியவில்லை.
முதலிடம் பிடித்த ‘சிங்க பெண்ணே’ சீரியல்
அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் ‘சிங்க பெண்ணே’ சீரியல் 9.17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஏழை பெண்ணான ஆனந்தி குடும்ப சூழல் காரணமாக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறார். அப்போது அவருக்கு அன்புடன் காதல் ஏற்படுகிறது. பின்னர் ஆனந்தி தனக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர் எவ்வாறு சமாளிக்கிறார்? என்பதே இந்த சீரியலின் மையக்கரு. இந்த சீரியல் பல நாட்களாக டிஆர்பி ரேட்டில் முதலிடம் பிடித்து வருவது குறிப்படத்தக்கது.
‘மூன்று முடிச்சு’ மற்றும் ‘கயல்’ சீரியல்
அதற்கு அடுத்த இடத்தில் 9 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது ‘மூன்று முடிச்சு’. சுவாதி கதாநாயகியாகவும், நியாஸ் கதாநாயகனாகவும் நடித்து வரும் இந்த தொடர் கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பின்னடைவை சந்தித்த ‘கயல்’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 8.42 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தனது குடும்பத்திற்காக அனைத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதையாக இந்த சீரியல் இருந்து வருகிறது. பல பிரச்சனைகளை சந்தித்து திருமணத்தை முடித்த கயல், திருமண வாழ்க்கையில் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை மையப்படுத்தி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஐந்தாவது இடத்தில் ‘சிறகடிக்க ஆசை’
7.53 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளது ‘மருமகள்’ சீரியல். கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபு-ஆதிரை திருமணம் முடிந்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் தற்போது 7.47 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த சீரியல் தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அருண் சீதா திருமண ட்ராக் காரணமாக இந்த சீரியல் சற்று தொய்வை சந்தித்துள்ளது.
பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்
ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் ‘அய்யனார் துணை’ சீரியலும், ஏழாவது இடத்தில் சன் டிவியின் ‘எதிர்நீச்சல்’ பாகம் 2 சீரியலும் இடம் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’, ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் ‘அண்ணன்: சீரியல், பத்தாவது இடத்தில் ஜீ தமிழின் ‘கார்த்திகை’ தீபம் ஆகிய சீரியல்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த வாரம் டாப் 10-க்குள் இடம் பிடித்த விஜய் தொலைக்காட்சியின் ‘மகாநதி’ சீரியல் இந்த முறை டாப் 10-ல் இருந்து வெளியேறி இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க விஜய் டிவியின் தொடர்கள் முன்னேறி வந்தாலும் சன் டிவியின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. டிஆர்பி தரவரிசை வாராவாரம் மாறும் என்பதால் வரும் வாரங்களில் இந்த பட்டியலில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.