MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கௌசல்யா முதல் த்ரிஷா வரை காதல் தோல்வியால் திருமணம் செய்யாமல் இருக்கும் டாப் 7 ஹீரோயின்கள்!

கௌசல்யா முதல் த்ரிஷா வரை காதல் தோல்வியால் திருமணம் செய்யாமல் இருக்கும் டாப் 7 ஹீரோயின்கள்!

Top 7 Actresses who Remained Unmarried after love Failure : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக அறியப்பட்டு, காதல் தோல்வியால் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் டாப் 7 ஹீரோயின்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

3 Min read
Rsiva kumar
Published : Jul 05 2025, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
17
த்ரிஷா:
Image Credit : Instagram

த்ரிஷா:

Top 7 Actresses who Remained Unmarried after love Failure : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக ஜொலித்து வருகிறார். 40 வயதை எட்டிய பின்னரும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. 

பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் இவர் டேட்டிங் செய்து வந்த நிலையில், சிலரது சூழ்ச்சி காரணமாக இவரது காதல் தோல்வியுற்றதாக கூறப்பட்டது. பின்னர் வருண்மணியன் என்கிற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நிச்சயதார்த்தமே நடந்த நிலையில், திடீர் கருத்து வேறுபாடு இவரது திருமண வாழ்க்கைக்கு உலை வைத்தது.

திருமணம் என்கிற வார்த்தையை எடுத்தாலே பயப்படும் த்ரிஷா, திருமணம் கொள்வதற்கு பயமே விவாகரத்து தான் என சில வருடங்களுக்கு முன் கூறினார். தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்வி தான் இவர் திருமணமே வேண்டாம் என கூற காரணம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

27
தபு:
Image Credit : Social Media

தபு:

பாலிவுட் திரை உலகை சேர்ந்த நடிகை தபு, தன்னுடைய 53 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அஜய் தேவன் போன்ற சில பாலிவுட் பிரபலங்களுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் அவரின் காதல் திருமணம் வரை செல்லவில்லை. எனவே தனக்கு திருமணமே வேண்டாம் என தற்போது வரை முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். தபு ஹிந்தியில் மட்டுமின்றி, தமிழிலும் காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

37
கௌசல்யா:
Image Credit : our own

கௌசல்யா:

கோலிவுட் திரையுலகில், 'காலமெல்லாம் காதல் வாழ்க' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இதை தொடர்ந்து நேருக்கு நேர், ஜாலி ,பிரியமுடன், சொல்லாமலே, பூபதி, உன்னுடன், போன்ற பல படங்களில் நடித்தார். தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த நடிகை கௌசல்யா, விஜய் - சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானவர்.

தற்போது அக்கா, அம்மா, அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர்.... 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். இதற்கு காரணம் இவருடைய காதல் தோல்வி என்று சில தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

47
அனுஷ்கா:
Image Credit : Asianet News

அனுஷ்கா:

தெலுங்கு திரை உலகின் மூலம் அறிமுகமாகி, தமிழில் 'இரண்டு' படம் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழில் சிங்கம் சீரிஸ், அலெக்ஸ் பாண்டியன், வேட்டைக்காரன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அனுஷ்கா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராகவே உள்ளார். தன்னுடைய 40 வயதை கடந்த பின்னரும், இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஜாதகத்தில் உள்ள பிரச்சனை என்பது ஒருபுறம் இருந்தாலும்.. பிரபாஸ் மீதான காதல் என்று டோலிவுட் திரையுலகில் சில தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

57
சித்தாரா - புதுப்புது அர்த்தங்கள்
Image Credit : our own

சித்தாரா - புதுப்புது அர்த்தங்கள்

'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த நடிகை சித்தாரா. இதைத் தொடர்ந்து உன்னை சொல்லி குத்தம் இல்லை, புதுப்புது ராகங்கள், புது வசந்தம், புரியாத புதிர் ஒரு வீடு ஒரு வாசல் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்த... சித்தாரா ஹீரோயின் வாய்ப்பு குறைய துவங்கிய பின்னர் படையப்பா, மனுநீதி, முகவரி, திருநெல்வேலி, மத்தாப்பு, பூஜை, போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். 

திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழில் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் இந்த ஆண்டு முடிவடைந்த 'பூவா தலையா' சீரியலில் ராஜேஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சித்தாரா, காதல் தோல்வி காரணமாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

67
நக்மா:
Image Credit : our own

நக்மா:

பாலிவுட் திரைப்படம் மூலம், திரை உலகின் தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும், பின்னர் தெலுங்கு, தமிழ், போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கியவர் நடிகை நக்மா. அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நக்மா அறிமுகமான திரைப்படம் 'காதலன்'.

நக்மா தன்னுடைய முதல் தமிழ் படத்திற்காகவே, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். இதை தொடர்ந்து ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகி ராமன், பிஸ்தா, போன்ற ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.

ஹீரோயின் வாய்ப்பு குறைந்த பின்னர் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த நக்மா, கடைசியாக தமிழில் சிட்டிசன் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். பின்னர் போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிக்க தொடங்கினார். தமிழக அரசியலிலும் கலக்கி வந்த நக்மா, பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் நடிகர் சரத்குமாருடன் தொடர்பில் இருந்தார் என கிசுகிசு எழுந்தது. அடுத்தடுத்து தன்னுடைய வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்பட்டதால், திருமணமே வேண்டாம் என முடிவு செய்து தற்போது வரை முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

77
கனகா:
Image Credit : our own

கனகா:

பிரபல நடிகை தேவிகாவின் ஒரே மகளான கனகா, 1989 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பின்னர் ரஜினி, பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த கனகாவை... அவருடைய தாயார் தேவிகாவின் இறப்பு ஒரு பக்கம் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில், இவர் ஒருவரை காதலித்து அந்த காதல் தோல்வி அடைந்ததால் தான் இனி யாரையும் வாழ்க்கையில் நம்ப கூடாது என முடிவெடுத்து, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. 51 வயதை எட்டிய பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

About the Author

Rsiva kumar
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
திரிஷா
தமிழ் சினிமா
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
 
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved