Trisha : திருச்சி கிழக்கில் போட்டியா? அரசியல் எண்ட்ரி குறித்து ஒரே போடாக போட்ட திரிஷா..!
Trisha About Political Entry : கோலிவுட்டின் இளவரசியாக கொண்டாடப்படும் நடிகை திரிஷா, அரசியல் எண்ட்ரி குறித்து ஓப்பனாக பதிலளித்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Trisha About Political Entry
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அதுமட்டுமின்றி இவரைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகளும் வட்டமடித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக விஜய் உடன் திரிஷா நெருங்கி பழகி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி வருகிறது. விஜய் முதல்வர் ஆனதும் அவரை வீட்டில் சென்று சந்தித்தது தொடங்கி, விஜய் பதவி ஏற்கும் போது கண்கலங்கியது வரை திரிஷாவின் பக்கம் தான் தற்போது ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் திரும்பி இருக்கிறது. விரைவில் திரிஷா அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

திருச்சி கிழக்கில் திரிஷாவா?
அதுவும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில் பெரம்பூர் தொகுதியை ஏற்று, திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு சிலரோ திரிஷாவை தவெக களமிறக்க வாய்ப்புள்ளதாக அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.
அரசியலில் குதிக்கப்போகிறாரா திரிஷா?
இதனால் திரிஷா சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு அரசியலில் குதிக்கப் போகிறாரா என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷா பதிலளித்திருக்கிறார். நடிகை திரிஷாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். மணிரத்னம் இயக்கிய அப்படத்தில் நடிகை திரிஷா, குந்தவையாக நடித்திருந்தார். அவர் நடித்திருந்தார் என்று சொல்வதோடு, அழகு பதுமையோடு அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
திரிஷா கொடுத்த நச் பதில்
பொன்னியின் செல்வன் பட புரமோஷனின் போது திரிஷாவிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அது என்னவென்றால், நீங்க அரசியலுக்கு வருவீங்களா? அரசியல் நுணுக்கத்தோடு நீங்க குந்தவை கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க. அதனால் உங்களுக்கு அரசியலில் நுழைய ஆர்வம் இருக்கிறதா? என கேட்டிருந்தார். இதற்கு சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்லை என பதிலளித்த திரிஷா, தான் அரசியலுக்குள் வர மாட்டேன் என்றும், அரசியல் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் நான் எதுவுமே செய்ய முடியாது என பதிலளித்து இருந்தார். அவரின் இந்த பேட்டியை நெட்டிசன்கள் தற்போது மீண்டும் வைரலாக்கி வருகின்றனர்.
திரிஷா கைவசம் உள்ள படம்
நடிகை திரிஷா கைவசம் தற்போது கருப்பு திரைப்படம் மட்டுமே உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். அப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இன்று சிறப்பு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த பைனான்ஸ் பிரச்சனை இன்றைக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி முடிக்கப்பட்டால், நாளை கருப்பு படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

