MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay : திரிஷாவுக்கு நன்றி... ரஜினிக்கு திட்டு - விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிளம்பிய சர்ச்சை..!.

Vijay : திரிஷாவுக்கு நன்றி... ரஜினிக்கு திட்டு - விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிளம்பிய சர்ச்சை..!.

Tamilnadu CM Vijay : விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 23 2026, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Trisha and Rajinikanth Controversy
Image Credit : X

Trisha and Rajinikanth Controversy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துவிட்டார். அவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதல்வராகவும் அரியணை ஏறிவிட்டார். அவர் முதல்வரான பின் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவர் முதல்வர் ஆன பின் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், தமிழ்நாடு முழுக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விஜய் பிறந்தநாளுக்கு குவிந்த வாழ்த்து
Image Credit : X

விஜய் பிறந்தநாளுக்கு குவிந்த வாழ்த்து

அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் சமூக வலைதளம் மூலமாக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுதவிர நேற்று முதல்வர் சட்டமன்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதால், அங்கிருந்த எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோரும் முதல்வரை மனதார வாழ்த்தினர். இப்படி ஏராளமானோர் வாழ்த்தினாலும் தமிழ்நாடே எதிர்பார்த்தது இருவரின் வாழ்த்துக்களை தான். ஆனால் அந்த இருவருமே நேற்று வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை.

34
வாழ்த்து தெரிவிக்காத திரிஷா
Image Credit : Instagram

வாழ்த்து தெரிவிக்காத திரிஷா

அதில் ஒருவர் நடிகை திரிஷா. விஜய் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா போடும் வாழ்த்துப் பதிவுகள் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால் இந்த ஆண்டு என்ன பதிவு போட்டு பரபரப்பை கிளப்பப் போகிறாரோ என்கிற பயத்திலேயே விஜய் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்களை மகிழ்விக்கும் விதமாக எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்துள்ளார் திரிஷா. தன்னுடைய பதிவால் முதல்வர் விஜய் எந்த விமர்சனத்திலும் சிக்கிவிடக் கூடாது என்கிற அக்கறையில் திரிஷா பதிவு போடவில்லை என கூறப்படுகிறது. அவர் பதிவு போடாததால் அவருக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

44
ரஜினியும் வாழ்த்து சொல்லவில்லை
Image Credit : instagram

ரஜினியும் வாழ்த்து சொல்லவில்லை

மறுபுறம் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத மற்றொரு பிரபலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். விஜய் முதல்வர் ஆனதில் இருந்தே ரஜினி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக திமுக, அதிமுக கூட்டணிக்கு ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று ரஜினியே பிரஸ்மீட் வைத்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காமல் மெளனமாக இருந்ததால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : வைல்டு கார்டில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்... TTF வாசன் உடன் வீட்டுக்குள் எண்ட்ரியாகும் அந்த 2 பேர் யார்?
Recommended image2
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image3
Siragadikka Aasai Salary : முத்து vs மீனா... அதிக சம்பளம் யாருக்கு? சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்களின் சம்பள விவரம் இதோ
Related Stories
Recommended image1
CM Vijay : என்ன உங்க அப்பாவையே காணோம்... கொளத்தூர்ல 5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் ஆடுச்சு - சட்டமன்றத்தில் சம்பவம் செய்த முதல்வர் விஜய்..!
Recommended image2
Now Playing
Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved