வட போச்சே! பாகுபலி உள்பட சூர்யா தவறவிட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் இத்தனையா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பிளாக்பஸ்டர் வசூல் படத்தை கூட கொடுக்காமல் இருக்கும் நிலையில், அவர் ரிஜெக்ட் செய்து ஹிட்டான படங்கள் பற்றி பார்க்கலாம்.

Suriya Rejected Movies : நடிகர் சிவக்குமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் எண்ட்ரி ஆனாலும், அதன் பின் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி, இன்றி சூர்யாவின் தந்தை சிவக்குமார் என சொல்லும் அளவுக்கு உச்ச நடிகராக உயர்ந்து நிற்கிறார் சூர்யா. இவர் ஆரம்ப காலகட்டங்களில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் நிறைய பட வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறார். அப்படி சூர்யா நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஆசை
நடிகர் சூர்யா 1997-ம் ஆண்டு வெளிவந்த நேருக்கு நேர். அப்படத்தை இயக்கிய வஸந்த், 1995-ம் ஆண்டே சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் சூர்யாவுக்கு அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் அந்த கதையில் அஜித் நடிக்க, அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அந்த படம் தான் ஆசை.
இயற்கை
நடிகர் சூர்யா தவறவிட்ட மற்றுமொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் இயற்கை. இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருந்தார். இதில் சூர்யாவை தான் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குனர். ஆனால் அந்த சமயத்தில் காதல் படங்களில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவில் சூர்யா இருந்ததால் இயற்கை படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அந்த வாய்ப்பு நடிகர் ஷியாமுக்கு சென்றது.
இதையும் படியுங்கள்... சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்; தடபுடலாக விருந்து வைத்த ஜோதிகா! என்ன விசேஷம்?
பருத்திவீரன்
அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய படம் தான் பருத்திவீரன். இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா தான். ஆனால் அந்த சமயத்தில் தன்னுடைய தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்த நல்ல கதையம் உள்ள படத்தை தேடி வந்த சூர்யா, பருத்திவீரன் கதையை கேட்டதும் கார்த்திக்காக அதை விட்டுக்கொடுத்தாராம். பின்னர் அந்த படம் கார்த்திக்கு ஒரு அடையாளமாக மாறியது.
துப்பாக்கி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்த சூர்யா, அதன் பின்னர் அவருடன் மீண்டும் இணைய இருந்த படம் தான் துப்பாக்கி. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சூர்யாவால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே அந்த கதை நடிகர் விஜய்க்கு சென்றது. நடிகர் விஜய்யின் கெரியரில் ஒரு மைல்கல் படமாக துப்பாக்கி இருந்து வருகிறது.
பாகுபலி
சூர்யாவின் காஸ்ட்லி மிஸ் என்றால் அது ராஜமவுலி இயக்கிய பாகுபலி தான். இந்திய சினிமாவே வியந்து பாராட்டிய இப்படத்தில் பாகுபலி கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமவுலி முதலில் அணுகியது சூர்யாவை தான். ஆனால் அந்த கதைக்கு தான் செட் ஆவேனா என்கிற குழப்பத்தில் நோ சொல்லிவிட்டாராம் சூர்யா. அதன்பின்னர் பிரபாஸ் பாகுபலியாக நடித்து இன்று பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... மாப்பிள்ளை மோடில் சூர்யா - பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டத்தில் தெறிக்கவிடும் 'கனிமா' பாடல் வெளியானது!