சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்; தடபுடலாக விருந்து வைத்த ஜோதிகா! என்ன விசேஷம்?
நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு தடபுடல் விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Suriya House Party Photos viral : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை கடந்த 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்றளவும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி பலருக்கு ரோல்மாடலாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர்.
சூர்யா வீட்டில் விருந்து
சூர்யா - ஜோதிகா வீட்டு பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் நடிகர் சூர்யா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மாப்பிள்ளை மோடில் சூர்யா - பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டத்தில் தெறிக்கவிடும் 'கனிமா' பாடல் வெளியானது!
குவிந்த நடிகைகள்
சூர்யா வீட்டு விருந்தில் கலந்துகொண்ட நடிகைகள் அனைவரும், அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி உணவும் அருமையாக இருந்ததாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
திரிஷாவும் பங்கேற்பு
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கடைசியாக இருவரும் ஆறு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பின்னர் இருவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா 45 திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.
விருந்து எதற்காக?
அதுமட்டுமின்றி நடிகை திரிஷா நேற்று காதல் பற்றி ஒரு பதிவை போட்டிருந்தார். மேலும் தலையில் பூ வைத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு நிச்சயதார்த்தம் ஆனதா என கேள்வி எழுப்பினர். அதன்பின் அவர் சூர்யா வீட்டு பார்ட்டியில் கலந்துகொண்டதால், ஒரு வேளை திரிஷாவுக்காக சூர்யாவும் ஜோதிகாவும் விருந்து வைத்தார்களா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... Trisha Photo: காதல் வென்றுவிட்டது; 41 வயதில் நடிகை த்ரிஷாவுக்கு திடீர் நிச்சயதார்தமா? வைரலாகும் புகைப்படம்!