MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் லிஸ்ட் இதோ

ஓடிடி தளங்களில் கடந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 03 2025, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 Most Watched Movies and Web series on OTT
Image Credit : Asianet News

Top 5 Most Watched Movies and Web series on OTT

ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் தற்போது படங்களை திரையரங்குகளில் பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுவதால், அதை வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் பார்க்கவே பெரும்பாலானோர் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில், ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த மே 36ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை பார்க்கலாம்.

24
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள்
Image Credit : our own

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள்

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஜான் ஆபிரஹாமின் தி டிப்ளோமேட் திரைப்படம் 5ம் இடத்தில் உள்ளது. இந்த படத்தை கடந்த வாரத்தில் மட்டும் 19 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. அடுத்ததாக மலையாளத்தில் பேசில் ஜோசப் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான மரணமாஸ் திரைப்படம் நான்காம் இடத்தில் உள்ளது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இப்படத்தை 23 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

Related Articles

Related image1
480 நாட்களுக்குப் பிறகு.. ‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Related image2
மோகன்லாலின் மாஸ்டர் பீஸ் படம் ‘தொடரும்’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
34
முதலிடத்தில் மோகன்லால் படம்
Image Credit : Social Media

முதலிடத்தில் மோகன்லால் படம்

3ம் இடத்தில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படம் உள்ளது. இப்படத்திற்கு நெட்பிளிக்ஸில் 26 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. அடுத்ததாக 2ம் இடத்தில் ஜாக் என்கிற தெலுங்கு படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இப்படம் 28 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள படம் துடரும். மோகன்லால் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படம் கடந்த வாரத்தில் மட்டும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் 29 லட்சம் பார்வைகளை பெற்றிருக்கிறது.

44
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்கள்
Image Credit : Instagram

ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்கள்

சோனி லிவ்வில் ஸ்ட்ரீம் ஆகி வரும் kankhajura என்கிற இந்தி வெப் தொடர், 18 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள Hai Junoon என்கிற தொடர் 20 லட்சம் பார்வைகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. The Last of Us என்கிற வெப்தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடர் 21 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. தமிழ் வெப் தொடரான ஹார்ட் பீட் சீசன் 2 ஜியோ ஹாட்ஸ்டாரில் 22 லட்சம் வியூஸ் உடன் 2ம் இடத்தில் உள்ளது. Criminal Justice: A Family Matter என்கிற இந்தி வெப் தொடர் தான் முதலிடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடருக்கு 84 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவறான எண்ணம்.. கையில் சிக்கிய வீடியோ! சுந்தரபாண்டியனுக்கு விஜி கொடுத்த மரண அடி - இன்றைய எபிசோட்!
Recommended image2
விவாகரத்து வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. மனைவியுடன் விஜய் சமரசம்? மனுவை திரும்ப பெறும் சங்கீதா? புது தகவல்!
Recommended image3
ராமாயணம் படத்தில் இணையும் கிறிஸ்டோபர் நோலன்.. ரூ.4,000 கோடி பட்ஜெட் படம்னா சும்மாவா
Related Stories
Recommended image1
480 நாட்களுக்குப் பிறகு.. ‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
Recommended image2
மோகன்லாலின் மாஸ்டர் பீஸ் படம் ‘தொடரும்’ ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved