ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘லால் சலாம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லால் சலாம்’ திரைப்படம் 

கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘லால் சலாம்’. இந்தப் திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, கே.எஸ் ரவிக்குமார், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டதாக படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பக்ரீத்தை முன்னிட்டு ஓடிடியில் வெளியாகும் ‘லால் சலாம்’

இந்த நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் ‘லால் சலாம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…