- Home
- Cinema
- ஏஸ் முதல் ஸ்குவிட் கேம் 3 வரை... அதிக வியூஸ் அள்ளி OTTயில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
ஏஸ் முதல் ஸ்குவிட் கேம் 3 வரை... அதிக வியூஸ் அள்ளி OTTயில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
ஜூன் 23-ந் தேதி முதல் 29ந் தேதி வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.

Top 5 Most Viewed Movies and Web Series on OTT
ஓடிடி தளங்களின் அசுர வளர்ச்சியால் தற்போது திரைப்படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களை விட ஓடிடியில் பார்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக நேரடியாக ஓடிடிக்கென பிரத்யேகமாக தயாராகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்களின் டாப் 5 பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வார வாரம் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 23-ந் தேதியில் இருந்து 29ந் தேதி வரை ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள்
கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்டது ரைடு 2 என்கிற இந்திப்படம் தான். அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியாகி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ரைடு 2 திரைப்படத்திற்கு 41 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அக்ஷய் குமார் நடித்த கேசரி சாப்டர் 2 திரைப்படம் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் கேசரி சாப்டர் 2 திரைப்படம் 36 லட்சம் பார்வைகளுடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.
ஓடிடியில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதியின் ஏஸ்
இந்தப் பட்டியலில் ஜாட் என்கிற பாலிவுட் திரைப்படம் தான் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. சன்னி தியோல் நாயகனாக நடித்துள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்துக்கு 25 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. நான்காம் இடத்தை அமேசான் பிரைமில் உள்ள கிரவுண்ட் ஜீரோ திரைப்படம் பிடித்துள்ளது. இதற்கு 24 லட்சம் பார்வைகள் கிடைத்திருக்கின்றன. இறுதியாக இந்தப் பட்டியலில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் 5ம் இடத்தை பிடித்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 23 லட்சம் வியூஸ் அள்ளி உள்ளது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்
அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் கேரளா கிரைம் ஃபைல்ஸ் என்கிற வெப் தொடர் தான் உள்ளது. அதன் இரண்டாம் சீசன் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடர் 34 லட்சம் வியூஸ் பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தி கிரேட் இந்தியன் கபில் ஷோ என்கிற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் உள்ளது. நெட்பிளிக்ஸில் உள்ள இந்த நிகழ்ச்சி 38 லட்சம் பார்வைகளை பெற்று நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது.
ஓடிடியில் கலக்கும் ஸ்குவிட் கேம் 3
Criminal Justice: A Family Matter என்கிற இந்தி வெப் தொடர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடர் 45 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. அடுத்ததாக கடந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன ஸ்குவிட் கேம் சீசன் 3 வெப் தொடர் இந்த பாடியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் தொடருக்கு 48 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகும் பஞ்சாயத் சீசன் 4 வெப் தொடர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வெப் தொடருக்கு 88 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு ஒரே வாரத்தில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர் என்கிற சாதனையையும் இது படைத்துள்ளது.