ஒரு படத்துக்கு 12 கோடி; கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதை பார்க்கலாம்.

Top 5 Tamil Cinema Music Directors Salary
கோலிவுட்டில் இசையமைப்பாளர்களுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு தசாப்தத்திற்கும் புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இளையராஜாவுக்கு அடுத்தபடியாக ஏ.ஆர்.ரகுமான் வந்தார். அவரைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் ஆளுமை செலுத்தினார். பின்னர் அனிருத் வந்து இசையுலகில் தனி ராஜ்ஜியம் நடத்தினார். தற்போது லேட்டஸ்டாக மியூசிக் சென்சேஷனாக சாய் அபயங்கர் உருவெடுத்து இருக்கிறார். அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இப்படி இசையமைப்பாளர்கள் நிரம்பி வழியும் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
5. யுவன் சங்கர் ராஜா சம்பளம்
அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் யுவன் சங்கர் ராஜா 5வது இடத்தில் உள்ளார். இவர் இசையமைப்பில் கடைசியாக ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் வெற்றியடையவில்லை. யுவன் கடைசியாக ஹிட் கொடுத்த ஆல்பம் என்றால் அது விஜய்யின் கோட் படம் தான். அப்படத்தின் வெற்றிக்கு பின் அவரது இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. இவர் ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.5 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
4. ஜிவி பிரகாஷ் குமார் சம்பளம்
கோலிவுட்டில் நடிகராக கால்பதித்த பின் இசையமைப்பதில் பெரிதும் கவனம் செலுத்தாமல் இருந்த ஜிவி பிரகாஷ், சமீப காலமாக நடிப்பதை குறைத்துவிட்டு, இசையமைப்பதில் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறார். இவர் இசையில் இந்த ஆண்டு வணங்கான், கிங்ஸ்டன், நீக், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் குட் பேட் அக்லியை தவிர மற்ற அனைத்து படங்களும் பிளாப் ஆகின. இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.6 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
3. தமன் சம்பளம்
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் பட்டியலில் தமன் 3ம் இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளமாக வாங்குகிறார். விஜய்யின் வாரிசு படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பின. அதன்பின்னர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார் தமன். இதுதவிர தெலுங்கில் செம பிசியாக பணியாற்றி வருகிறார்.
2. ஏ.ஆர்.ரகுமான் சம்பளம்
இந்திய திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான். அவருக்கு அடுத்து அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்கள் பார்ம் அவுட் ஆனாலும் ஏ.ஆர்.ரகுமான் இன்றும் முன்னணியில் இருக்கிறார். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு காதலிக்க நேரமில்லை மற்றும் சாவா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
1. அனிருத் சம்பளம்
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். அவர் இசையில் இந்த ஆண்டு கூலி, ஜன நாயகன், ஜெயிலர் 2, கிங்டம், மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அரை டஜன் படங்களுடன் செம பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், ஒரு படத்திற்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.