சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்த்திய டாப் 5 படங்கள் லிஸ்ட்
Top 5 Movies of Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் ஈட்டிய டாப் 5 தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. அமரன்
நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.330 கோடி வசூலித்து இருந்தது. மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் படம் எடுக்கப்பட்டு இருந்தது.
2. டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் டான். இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.125 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார்.
3. டாக்டர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்த படம் டாக்டர். கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.102 கோடி வசூலித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் ‘ஹிட்’மேன் சிவகார்த்திகேயன்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
4. வேலைக்காரன்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் வேலைக்காரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.87 கோடி வசூலித்து இருந்தது.
5. மாவீரன்
சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் மாவீரன் திரைப்படம் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.81 கோடி வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் SK 23 படத்தின் டைட்டில் இதுதானா? இதுவும் பழைய டைட்டில் ஆச்சே!