சிவகார்த்திகேயனின் SK 23 படத்தின் டைட்டில் இதுதானா? இதுவும் பழைய டைட்டில் ஆச்சே!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள எஸ்.கே.23 திரைப்படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

SK 23 பட டைட்டில்
தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன, அதில் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். மற்றொன்றை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வெளியிடப்படவில்லை. இதனால் தற்காலிகமாக எஸ்.கே.23 என அழைக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டு உள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி
தன் படங்களுக்கு பழைய பட டைட்டிலை தொடர்ச்சியாக வைத்து வரும் சிவகார்த்திகேயன், அவருடைய 25வது படத்திற்கு பராசக்தி என பெயரிட்டதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பின. அந்த டைட்டிலை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என சிவாஜி நடித்த பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. அதையும் மீறி அதே தலைப்புடன் சிவகார்த்திகேயன் பட பணிகள் நடப்பதால் ரிலீஸ் சமயத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகளும் இருக்கிறது.
இதையும் படியுங்கள்... 9 வருடங்களுக்கு பின் ரீ-ரிலீஸ் செய்யப்படும் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படம்!
பழைய பட டைட்டில்களை விரும்பும் சிவகார்த்திகேயன்
பராசக்தி மட்டுமின்றி அதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன் ஆகிய படங்களின் தலைப்பும் பழைய படங்களில் இருந்து எடுக்கப்பட்டது தான். அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனின் 23-வது படத்தின் தலைப்பும் பழைய பட டைட்டிலாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. பிப்ரவரி 17ந் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று அப்படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
SK 23 டைட்டில் சிகரம்?
அது என்ன டைட்டில் என்கிற தகவல் தற்போது லீக் ஆகி இருக்கிறது. அதன்படி எஸ்.கே.23 படத்திற்கு சிகரம் என பெயரிடப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே சிகரம் என்கிற தலைப்பில் கடந்த 1981-ம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிப்பில் ஒரு படம் வெளியானது. அப்படத்தை அனந்து இயக்கி இருந்தார். அப்படத்திற்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்து இருந்தார். தற்போது 44 ஆண்டுகளுக்கு பின் அதே தலைப்பு சிவகார்த்திகேயன் படத்துக்கு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அமரன் 100 நாள் வெற்றி கொண்டாடத்தில் சம்பளம் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சிவகார்த்திகேயன்!