- Home
- Cinema
- 2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்: First அண்ட் Last யார் தெரியுமா?
Top 5 Best Directors of Tamil Cinema in 2025 : 2025ஆம் ஆண்டில் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த டாப் 5 சிறந்த இயக்குநர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டிற்கான டாப் 5 சிறந்த இயக்குனர்களின் பட்டியல்
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் திரைக்கு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு சிறிய படஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் அடிப்படையிலும் சிறந்த கதை மற்றும் விமர்சனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் சிறந்த இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த இயக்குநர்கள் பற்றி பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ்: கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்த கூலி படம் தான் இந்த ஆண்டில் அதில் வசூல் குவித்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்திய சினிமாவில் மிக வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது. அதிக வசூலை பெற்று இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்றது லோகேஷ் கனகராஜ் அதிரடியான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்று படம் ஆக்கப்பட்டது.
அஸ்வத் மாரிமுத்து: டிராகன்
ஓமை கடவுளே என்னும் படத்தை இயக்கி நன்கு வரவேற்பை தமிழ் சினிமாவிலும் ரசிகர் மத்திலையும் பெற்றார். இதயபூர்வமான படங்களை இவர் இயக்கி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். அப்பை இவரது இயக்கத்தில் வந்த டிராகன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்த படம் என்ற சாதனையை இந்தப் படம் படைத்தது. இந்தப் படம் ரூ.152 கோடி வரையில் வசூல் குவித்து அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது.
கீர்த்தீஸ்வரன் : டியூட்
சூரரைப் போற்று படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இன்றைய இளம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற படம் தான் டியூட். முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.100 கோடி கொடுத்து அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது.
அபிஷன் ஜீவிந்த் : டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் மற்றும் சிம்ரன் காம்பினேஷனில் வெளியான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. எளிமையான கதை, எதார்த்தமான நடிப்பு, காதல், குடும்ப செண்டிமெண்ட் என்று ஒட்டுமொத்த குடும்ப ஆடியன்ஷையும் கவர்ந்திழுத்த படம். இந்தப் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தி இன்று ஒரு ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்போது ரூ.90 கோடி வரையில் வசூல் குவித்து இந்த ஆண்டின் சிறந்த படம் என்ற மகத்தான சாதனையை பெற்றிருக்கிறது.
ராஜேஸ்வர் காளிசாமி: குடும்பஸ்தன்
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் குடும்பஸ்தன் பட இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி. இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். அன்றாடம் குடும்ப வாழ்க்கையை நடத்தும் சாதாரண நடுத்த வர்க்கத்து மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் குடும்பஸ்தன். ஒட்டுமொத்த தமிழ்நாடே சேர்ந்து கொண்டாடிய படம் என்று சொல்லும் அளவிற்கு இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நலல் வரவேற்பு பெற்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.