உலக சினிமாவையே வியக்க வைத்த டாப் 3 ஹிட் தமிழ் சாங்ஸ்!
top 3 tamil hit songs : உலகளவில் தமிழ் சினிமா பாடல்கள் பிரபலமடைந்து வருகின்றன. இதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ர்க்கலாம்.

உலக சினிமாவையே வியக்க வைத்த டாப் 3 ஹிட் தமிழ் சாங்ஸ்!
top 3 tamil hit songs : உலகளவில் தமிழ் சினிமா பாடல்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஆண்டுதோறும் 600க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் சிறிய பட்ஜெட் படங்களும் அடங்கும். அப்படி வெளியாகும் படங்கள் எல்லாமே ஹிட் கொடுக்கின்றனவா என்றால் இல்லை. இதில், ஒரு சில படங்கள் மட்டும் ஹிட் படங்களாக அமைகின்றன. ஆனால், பெரும்பாலான படங்களில் பாடல்கள் ஹிட் பாடல்களாக அமைந்து படங்களுக்கு வரவேற்பு பெற்று கொடுத்துவிடுகின்றன. அப்படிப்பட்ட படம் மற்றும் பாடல்கள் பற்றி பார்க்கலாம்.
ஒய் திஸ் கொலவெறி பாடல்
தனுஷ் பாடி, எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு அனிருத் இசையமைத்தார். இதுவே அனிருத்தின் முதல் பாடல். யூடியூப்பில் பிரபலமான இந்தப் பாடல் பலரின் ரிங்டோனாகவும் இருந்தது. இன்று வந்த இந்தப் பாடலுக்கான அர்த்தம் பலருக்கும் புரியாத புதிராக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் கலந்து இந்தப் படம் வெளியாகியிருக்கும்/ இந்தப் பாடல் இடம் பெற்ற படம் தான் 3. இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
அனிருத், தனுஷ் காம்போ:
3 படத்தில் இடம் பெற்ற பாடலின் மூலம் அனிருத், தனுஷ் காம்போ பிரபலமானது. தனுஷுக்கு இந்தி, ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது இருவரும் தனித்தனியாகப் பயணிக்கின்றனர்.
'ரவுடி பேபி' பாடல்:
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த படம் மாரி 2. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு 2ஆம் பாகத்தில் கிடைக்கவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்ற மாரி 2 பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இந்தப்' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடலும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.
அரபிக் குத்து பீவர்:
தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் லீடு ரோலில் நடித்து திரைக்கு வந்த படம் தான் பீஸ்ட். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் கூட படத்தில் இடம் பெற்ற பாடல் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அப்படி என்ன பாடல் என்று கேட்கிறீர்களா, அந்த பாடல் தான் அரபிக் குத்து. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைக்க, நெல்சன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விஜய்யின் நடனம் இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம். ஒரு மாதத்தில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த இந்தப் பாடல் உலகளவில் டிரெண்டானது. இதன் மூலம் தமிழ் படங்களும் உலகளவில் கவனம் பெறுகின்றன.