நாகேஷ் முதல் அப்புக்குட்டி வரை.. தேசிய விருது வென்ற டாப் 3 கோலிவுட் காமெடி நடிகர்கள்!
National Award : இந்திய திரையுலகை பொறுத்தவரை தேசிய விருது என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
AR Rahman
தேசிய விருது என்பது திரைத்துறைக்கு மட்டும் கொடுக்கப்படும் விருது இல்லை என்றாலும் கூட, சினிமா துறையில் உள்ளவர்கள், மிகப்பெரிய பெருமையாக கருதும் விஷயங்களில் ஒன்று தான் தேசிய விருதுகள். இந்தியாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் தான் ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளைப் பெறுபவர்களுக்கு அதை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த செயல்திறன் அல்லது சிறப்பான சேவைக்காக, மக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. முன்பே கூறியதைப்போல சினிமா மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் என்று வரும்போது கமல்ஹாசன் தான் அதிக அளவிலான தேசிய விருது வென்றவர்கள் பட்டியலில் முதலில் உள்ளார். ஆனால் பொதுவாக சினிமா கலைஞர்கள் என்று வரும்போது, இசையமைப்பாளரை ரகுமான் தான் 7 தேசிய விருதுகளுடன் முன்னிலையில் உள்ளார்.
மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!
Actor Nagesh national award
சினிமா என்று வரும் பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர் தான் நாகேஷ் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் "செயூர் கிருஷ்ணா நாகேஸ்வரன்". கடந்த 1958ம் ஆண்டு தமிழில் வெளியான "மனமுள்ள மறுதாரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 1961ம் ஆண்டு வரை வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்று நடித்த நாகேஷ், ஒரு கட்டத்தில் வருடத்திற்கு 15 முதல் 20 திரைப்படங்கள் வரை நடித்து அசத்திய மாபெரும் நடிகராக மாறினார்.
தமிழ் திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகரைப் போலவே முக பாவனைகள் மற்றும் உடல் மொழிகளை வெளிப்படுத்தும் எத்தனையோ நபர்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் இன்றளவும் நாகேஷின் உடல் மொழியை நேர்த்தியாக பிரதிபலிக்கும் ஒருவர் கூட இல்லை என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. அந்த அளவிற்கு மிகவும் தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நாகேஷ்.
கடந்த 1994ம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "நம்மவர்" என்ற திரைப்படத்தில் "பிரபாகர் ராவ்" என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் அவர் தனது முதல் தேசிய விருதை வென்றார். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு காமெடி நடிகர் தேசிய விருது வென்றது அதுவே முதல் முறை என்று சில தகவல்கள் உள்ளது.
Appu Kutty
தூத்துக்குடியில் இருந்து சினிமா ஆசையோடு புறப்பட்டு சென்னை வந்து, வடபழனி பகுதியில் ஒரு ஹோட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்த நடிகர் தான் அப்புகுட்டி என்று நம்மால் அழைக்கப்படும் சிவபாலன். தமிழ் மொழியைத் தவிர பிற மொழிகளில் அவர் பெரிய அளவில் நடிக்கவில்லை. கடந்த 1998ம் ஆண்டு பிரபல நடிகர் மம்மூட்டி நடிப்பில் தமிழில் வெளியான "மறுமலர்ச்சி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் அவர்.
தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த சிவபாலனுக்கு, 2009ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் "அப்புகுட்டி" என்று இவர் அனைவராலும் அழைக்கப்பட்டார். தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வந்த அப்புகுட்டி, கடந்த 2011ம் ஆண்டு வெளியான "அழகர் சாமியின் குதிரை" என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தான் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழில் நல்ல பல படங்களில் நடித்து வரும் அவர், இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "மார்கழி திங்கள்" என்கின்ற திரைப்படத்தில் ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Thambi Ramaiyah
சினிமா ஆசையோடு புதுக்கோட்டையில் இருந்து சென்னை வந்த நபர் தான் தம்பி ராமையா ஜெகநாதன் பிள்ளை. தொடக்கத்தில் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிரபல சன் டிவியில் நாடகங்களுக்கு வசனம் எழுதும் நபராக தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு பி. வாசு மற்றும் டி. ராஜேந்தர் போன்ற முன்னணி இயக்குனர்களோடு இணைந்து உதவி இயக்குனராகவும் பயணிக்க தொடங்கினார்.
மெல்ல மெல்ல திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு அவருக்கு கிடைத்த நிலையில், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான "மலபார் போலீஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ச்சியாக "மனுநீதி", "கோவில்பட்டி வீரலட்சுமி", "அருள்", "கோடம்பாக்கம்" மற்றும் "பம்பரக்கண்ணாலே" உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த அவருக்கு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இயக்குனராகவும் ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ள அவர் கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான "மைனா" என்ற திரைப்படத்தில் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காகத்தான் அவருக்கு முதல் முதலில் தேசிய விருது வழங்கப்பட்டது.
கௌதமி மேல் உள்ள காதலை வெளிப்படுத்த கமல்ஹாசன் எழுதிய பாடல்! எது தெரியுமா?