டான் மூலம் டாப் 3 நடிகரான சிவகார்த்திகேயன்..எஸ்.ஜே. சூர்யா சொன்ன சீக்ரெட்
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

don movie
தொகுப்பாளராக இருந்து நடிகராக இளசுகள் முதல் பெரியவர்கள் வரை தன வசம் ஈர்த்துள்ளவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது எஸ்.கே 20 மற்றும் அயலான் என இரு படங்களில் பிஸியாக உள்ளார். இவரது சமீபத்திய வெளியீடான டான் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவான டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.
don movie
ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக கடந்த மே 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
don movie
ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வகையில் டான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் படக்குழுவை அழைத்து பாராட்டி இருந்தார். அதோடு கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் போது எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தியதாக ரஜினிகாந்த் குறியிருந்தாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார்.
don movie
இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த எஸ்.ஜே. சூர்யா, இதில் " சில படங்களிலுக்கு முன் தமிழ் சினிமாவில் நான்காவது, ஐந்தவது இடத்தில் இருந்த சிவகார்த்திகேயன், டான் படத்திற்கு பிறகு டாப் 3க்கு வந்துவிட்டார் என்று கூறியுள்ளார். எஸ்.ஏ. சூர்யா டான் படத்தில் கல்லூரி டீனாக மாஸ் காட்டி இருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.