விலையுயர்ந்த சொகுசு பங்களா வைத்திருக்கும் டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்
South Indian actors Most Expensive Houses : தென்னிந்திய நடிகர்களில் பலர் சொகுசு மற்றும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர். அவர்களில் டாப் 10 நடிகர்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

தனுஷ்
தென்னிந்திய நடிகர்களில் மிகவும் விலையுயர்ந்த வீடு வைத்திருக்கும் நடிகர் தனுஷ். இவர் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.
அல்லு அர்ஜுன்
புஷ்பா படத்தின் மூலம் பான்-இந்தியா ஸ்டாராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் பங்களாவின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்.
தளபதி விஜய்
தமிழ் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் வசித்து வரும் சொகுசு பங்களாவின் மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி ரூபாய்.
பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் வசிக்கும் வீட்டின் மதிப்பு 60 கோடி ரூபாய்.
அக்கினேனி நாகார்ஜுனா
தெலுங்கு மூத்த நடிகரான அக்கினேனி நாகார்ஜுனா, இன்றும் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலால் இளைஞர்களைக் கவர்ந்து வருகிறார். இவர் 42 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசிக்கிறார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆன்மீகத்தில் ஈடுபட்டு எளிமையான வாழ்க்கை வாழ்கிறார். இவரது பங்களாவின் மதிப்பு 35 கோடி ரூபாய்.
ராம் சரண்
சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், இன்று நாடு முழுவதும் பாராட்டப்படும் நடிகர்களில் ஒருவர். இவர் வசிக்கும் பங்களாவின் மதிப்பு 30 கோடி ரூபாய்.
பிருத்விராஜ் சுகுமாரன்
மலையாளத் திரையுலகில் இருந்து இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். இவரது மும்பை பங்களாவின் மதிப்பு 30 கோடி ரூபாய்.
சமந்தா நிராகரித்த படங்கள் எல்லாம் தோல்வியா? அட இதென்ன புதுசா இருக்கே?
மகேஷ் பாபு
எவர்கிரீன் ஹேண்ட்சம் நடிகர் மகேஷ் பாபுவின் பங்களாவின் மதிப்பு சுமார் 28 கோடி ரூபாய்.
பாகுபலி: தி எபிக்-ல் நீக்கப்பட்ட காட்சிகள்; 3 மணி 43 நிமிடங்களாக குறைக்கப்பட்ட படம்!
கமல்ஹாசன்
விலையுயர்ந்த வீடுகளைக் கொண்ட நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலில் கமல்ஹாசனும் உள்ளார். இவர் 19.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.